View in the JustOut app
X

”எனக்கு ரத்தத்தைக் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தருகிறேன்” என முழங்கி, இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்த வங்கம் தந்த சிங்கம் சுபாஷ் சந்திர போசின் 122வது பிறந்த தினம் இன்று. இந்திய இளைஞர்களுக்குக் கனவாக வாழ்ந்த இந்த ஒற்றை மனிதனைப் பார்த்து ஆங்கில அரசு அரண்டது வரலாறு.

01:35:01 on 23 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சிம்பு தனது ரசிகர்களுக்கு வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்திற்கு வந்தா அண்டாவோடதான் வரணும் என கட்டளையிட்டதை போறவன் வரவனெல்லாம் கழுவி கழுவி ஊத்தும் மேட்டரில் பதிலடி கொடுக்கமுடியாமல் திணறி வருகின்றனர் யங் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பட்டாளம்.

01:15:01 on 23 Jan

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

உத்தரப் பிரதேச மாநில கிழக்கு பிராந்தியத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், காங்கிரசில் பதவி தந்ததன் மூலம் பிரியங்கா காந்தி நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளார்.

01:11:34 on 23 Jan

மேலும் வாசிக்க தினகரன்

பாராளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், அமைச்சர் பி. தங்கமணி, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

12:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 1-1 என தென்ஆப்பிரிக்க அணி சமன் செய்தது. 3வது ஒருநாள் போட்டி 25ஆம் தேதி செஞ்சூரியனில் நடைபெற இருக்கிறது.

12:35:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மன்னார்குடி, அவிநாசி, ராஜபாளையத்திலும் ஜாக்டோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

12:15:02 on 23 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ரவி என்பவர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், அரசு சார்பில் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்றும், தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

11:55:02 on 23 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

வெங்காயம், பூண்டு, பலாக்கொட்டை ஆகியவற்றை சுலபமாக உரிக்க கைகளில் இரண்டு மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு நன்றாக அவற்றை தேய்த்து வைத்து விடுங்கள். மறுநாள் உரிக்க ஒரு நிமிடம்கூட ஆகாது.

11:35:01 on 23 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பொருளாதார வளர்ச்சி அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், வறுமை ஒழிப்பு மிகப்பெரிய சவால் என்றும் டாவோசில் நடந்த உலக பொருளாதார ஆய்வு மாநாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா பேசினார்.

11:15:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினமலர்

நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் நிலவி வரும் உறை பனி அடுத்த இரண்டு இரவுகள் தொடரும் என்றும், உள்தமிழக மாவட்டத்தில் மூடு பனி நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களோடு அதிமுக கூட்டணி அமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை என அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என அவர் விளக்கமளித்தார்.

10:35:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த கனகதுர்கா, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படியென்றால்தான் வீட்டிற்குள் அனுமதிப்போம் என்றும், குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அரசு விடுதியில் தஞ்சம் புகுந்துள்ளார்.

10:15:01 on 23 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இன்று சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களை கொண்டு, அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

09:55:02 on 23 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7

தீவிரவாத செயல்களை மதராஸா பள்ளிகள் ஊக்குவித்து வருவதாகவும், எனவே நாடெங்கிலும் உள்ள மதராஸா பள்ளிகளை மூட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷியா வஃபு வாரியத் தலைவர் வாசீம் ரிஸ்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

09:35:02 on 23 Jan

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

அதிமுகவுக்குள் கூட்டணி தொடர்பான குழப்பங்கள் ஒருபக்கம் நிலவி வந்தாலும் இன்னொரு பக்கம், வர இருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கட்சிக்குள்ளேயே யாருக்கு எந்த தொகுதி, தேர்தல் செலவுகளை கவனித்துக் கொள்வது யார் என்ற கேள்விகள் வெளியே தெரியாத தீயாக எரிந்துகொண்டிருக்கின்றன.

09:15:01 on 23 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முறையான ஆவணங்கள் இன்றி மின்னணுப் பொருட்கள் கொண்டுவரப்படுவதாக வந்த தகவலை அடுத்து எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலிலில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொணடனர். இதில் ஒரு கோடி மதிப்புள்ள செல்போன், ஹார்ட் டிஸ்க், கம்ப்யூட்டர் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

08:56:01 on 23 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரஷிய விமானம் ஒன்று, சைபீரியாவின் சூர்குத் நகரத்தில் இருந்து மாஸ்கோ நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு நபர், விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பும்படி விமான ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அந்த நபர் குடிபோதையில் இருந்துள்ளார்.

08:35:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

நேற்றைய தினம் நிஃப்டி இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலையில் இன்றைக்கும் அனைத்துவிதமான டிரேடர்களுமே வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது எனலாம். ஹைரிஸ்க் டிரேடர்களுமேகூட வியாபாரத்தின் அளவை மிகவும் கணிசமாக அளவில் குறைத்துக்கொள்வதே நல்லது எனலாம்.

08:18:01 on 23 Jan

மேலும் வாசிக்க விகடன்

நேற்றைய தினம் நிஃப்டி இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலையில் இன்றைக்கும் அனைத்துவிதமான டிரேடர்களுமே வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது எனலாம். ஹைரிஸ்க் டிரேடர்களுமேகூட வியாபாரத்தின் அளவை மிகவும் கணிசமாக அளவில் குறைத்துக்கொள்வதே நல்லது எனலாம்.

08:15:02 on 23 Jan

மேலும் வாசிக்க விகடன்

இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

07:56:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார். இந்த மாநாட்டின் மூலமாக சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

07:35:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினமணி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.99ஆகவும், டீசல் விலை ரூ.69.62ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 23 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விஜய் சேதுபதி புதிய படத்தில் வயலின் வாசிக்கும் இசை கலைஞராக நடிக்கிறார். இந்தப் பற்றிப் பேசிய இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த், ’இந்தப் படம் சர்வதேச அளவில் நடைபெறும் பிரச்சினையைப் பற்றிப் பேசும் படம். படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

06:56:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெங்களூரில் செயல்படும் இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனம், புதிய இலகு ரக ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரின் தாக்குதல் திறன் மற்றும் செயலாற்றல் ஆகியவை, ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

06:40:01 on 23 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

06:25:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினகரன்

2019ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 2019இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5ஆக அதிகரிக்கும் என்றும் 2020ஆம் ஆண்டு 7.7 சதவீதமாகவும் உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF- International Monetary Fund) தெரிவித்துள்ளது.

06:10:01 on 23 Jan

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் மூன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

05:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ‘எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒன்பது பேர் பிரதமர் ஆகும் ஆசையில் உள்ளனர். பிரதமர் மோடி மட்டுமே வலிமையான மற்றும் நிலையான அரசை வழங்க முடியும்’ என்று கூறியுள்ளார்.

05:40:02 on 23 Jan

மேலும் வாசிக்க தின மலர்

’எனக்கு அடுத்த ஆண்டு தான் திருமணம் நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்து விடுவேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். புதிய படங்கள் ஏதும் ஒப்பந்தமாகவில்லை’ என நடிகை ரித்விகா கூறியுள்ளார்.

05:25:01 on 23 Jan

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

தலையில் எண்ணை தேய்ப்பது, தேங்காய் பால் தேய்த்துக் குளிப்பது அல்லது வெந்தயம் அரைத்துப் போட்டு பொடுகு வராமல் தடுப்பதன் மூலமும் முடி வளர்ச்சி அதிகரிக்கும், உதிர்வது குறையும். இயற்கையாகக் கிடைக்கும் சில உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிட்டு அல்லது சமையலில் சேர்த்துக் கொண்டால் கூந்தல் உதிர்வது நின்று, வளர்ச்சி பெறும்.

05:10:02 on 23 Jan

மேலும் வாசிக்க ie தமிழ்

தனியார் தொலைக்காட்சியில் பேசிய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ’இந்தியாவின் பொருளாதரா வளர்ச்சி வேகமாக இருந்த போதிலும், தேவையான எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாதது நல்லதல்ல’ என்று கூறியுள்ளார்.

04:56:01 on 23 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மூன்று ஊட்டச் சத்துகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையாகும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த மூன்று ஊட்டச்சத்துகள் இருக்கும் வகையில் உணவினை எடுத்துக் கொள்வது அவசியம்.

04:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நமக்கு தெரிந்த 124 காபி வகைகளில் 60 சதவீதம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நாம் பயன்படுத்தும் காபி பயிர் அழியாமல் இருக்க வேண்டுமானால், வன காபி ரகமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

04:40:02 on 23 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தனது நடிப்பைத் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கையின் மீது ரசிகர்களின் கவனம் செல்வதால் சர்ச்சைகளிலிருந்து தள்ளியிருக்கவே தான் விரும்புவதாக தமிழில் முதன்முதலாக பேட்ட படம் மூலம் வில்லனாக அறிமுகமான நவாசுதின் நடிகர் நவாசுதின் சித்திக் கூரியுள்ளார்.

04:25:02 on 23 Jan

மேலும் வாசிக்க காமதேனு

இயக்குநர் சுந்தர் பாலு ‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா என நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்கிறார்.

04:10:01 on 23 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயத்தை வளர்க்க வேண்டுமென நாடே விவசாயத்தை ஊக்குவிக்கும் வேளையில், ’இனிமேல் எதுக்கு விவசாயம்?’ என கேள்விக்கேட்டு மக்களைத் திணறடித்திருக்கின்றார் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் ச.ம.உ-வும், காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய அமைச்சருமான பாஸ்கரன்.

03:55:02 on 23 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

தவழ்தல் என்பது, குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான மைல்கல். குழந்தை அதைச் செய்யாமல், அடுத்தக் கட்டத்துக்குப் போவது சரியானது அல்ல. தவழ்தலைத் தடுத்தால், பின்னாளில் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் ஒருங்கிணைக்கும் திறனில் குறைபாடு ஏற்படும்.

03:40:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள விஸ்வாசம் படம் தமிழில் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. இப்போது தெலுங்கில் படத்தைத் திரையிட பலர் முன் வந்துள்ளார்களார்கள்.

03:10:01 on 23 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தை ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளார். லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

02:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

புது டெல்லியில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை காவல்துறை சிறப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது காலிக் சேக் என்பவரிடம் காவல் திறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

02:40:01 on 23 Jan

மேலும் வாசிக்க EENADU

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி உட்பட 20 பேரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்துள்ளார் சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ்.

02:25:01 on 23 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

’மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக செயல்படும் வெடிகுண்டு தயாரிப்பு மையங்களை மூடவேண்டிய அவசியம் உள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அவை மூடப்படும். அரசு நிர்வாகமும் அரசியலாகியுள்ளது’ என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

02:10:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினத் தந்தி

‘தி வாய்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடுவராக பங்கேற்க உள்ளார். அதற்கான விளம்பரப் படப்பிடிப்பின் போது பேசிய ரகுமான், ’நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம்’ என்று கூறியுள்ளார்.

01:56:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

தேன்கனிக்கோட்டை அருகே கச்சுவாடியில் கல்குவாரி நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். குட்டையில் தவறிவிழுந்த மகள் மீனாட்சியைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்து தாய் மாதேவியும் உயிரிழந்தார்.

01:40:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினகரன்

தேசிய பால் மேம்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் அறிவியல் துறையில் பட்டமும், அனுபவமும் பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பெற்று பயனடையலாம்.

01:26:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினமணி

நடிகர் மாதவன் ‘ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகக் களமிறங்குகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது. நடிகர் மாதவன் இயக்குநராக புதிய அவதாரம் எடுப்பது அவரது ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

01:10:02 on 23 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொஞ்சம் நேரம் கழித்து எண்ணெய் வடிய வாய்ப்புள்ளது. இதற்கு முகத்தை துடைத்தால் உங்கள் எல்லா மேக்கப்பும் பாழாகி விடும். எனவே டிஸ்யூ பேப்பர் அல்லது பிளாட்டி சீட் கொண்டு முகத்தை ஒற்றி எடுத்தால் போதும். உங்கள் மேக்கப்பும் களையாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

12:56:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

உத்தரபிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில், குடும்பத்தைக் காப்பாற்ற ஆண் வேடத்தில் சலூன் கடையை நடத்திய சகோதரிகள் பற்றிய தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சகோதரிகளின் கனவு, சூப்பரான ஒரு பியூட்டி பார்லரை எதிர்காலத்தில் தொடங்க வேண்டும் என்பதாகும்.

12:40:02 on 23 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.1,291 கோடியாக இருந்ததாக, இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

12:26:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினமணி

ஐடிபிஐ வங்கியை எல்ஐசி வாங்குவதற்கான முயற்சிகள் 2018 ஜூன் முதல் நடந்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்பதலை அளித்தது. இந்நிலையில் இந்த நிறுவன கைப்பற்றுதல் தற்போது நிறைவடைந்துள்ளது.

12:10:01 on 23 Jan

மேலும் வாசிக்க தி இந்து

சேலம் மாவட்டம் மேட்டூரில் பறவைகளுக்காக ஊடுபயிராக தானியங்களை இயற்கை விவசாயி ராஜமாணிக்கம் வளர்த்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக சிறுதானியங்களை சாகுபடி செய்து வருகிறார்.

11:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், ‘லோக்பால் அமைப்பை ஏற்படுத்தியிருந்தால், ரஃபேல் போன்ற முறைகேடுகள் நிகழ்ந்திருக்காது,’ என கூறினார். மேலும், ’ரஃபேல் விவகாரம் தொடர்பான பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை ஆராயவிருக்கிறேன்.’

11:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

’உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக ஸ்கோர் செய்தும் பயனில்லை, அணியில் இடம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும், தேர்வு வாரியத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை மாத்யூ வாட் வறுத்தெடுத்துள்ளார்.

11:26:01 on 22 Jan

மேலும் வாசிக்க காமதேனு

போப் ஆண்டவருடன் பிரார்த்தனைச் செய்வதற்காக பிரத்யேகமான புதிய செயலி ஒன்றை போப் ஆண்டவர் அறிமுகம் செய்துவைத்துள்ளார். ‘கிளிக் டூ பிரே’ என்கிற அந்த செயலி மூலம் போப் ஆண்டவர் எதற்காக? எப்போது? பிரார்த்தனை செய்யப்போகிறார் என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள முடியும்.

11:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்டத்தில், கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்கள் கருகி விடுவதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களாக பூக்கள் மலராமல் அரும்புகளாகவே செடியிலே கருகி வருகின்றன. இதனால், வரத்துக் குறைந்து திண்டுக்கல் பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ மல்லிகை பூ 1600 ரூபாய் வரை விற்பனையாகிறது.

10:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உத்திரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூரில் உள்ள ஏரியிலிருந்து குழந்தையின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையின் போது குழந்தைக்கு பேய் பிடித்துள்ளதாக ஒரு மந்திரவாதி கூறியதை நம்பி அக்குழந்தையைப் பெற்றோர் குழந்தையை ஆற்றில் தூக்கி வீசியதாக தெரியவந்துள்ளது.

10:41:02 on 22 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

வேலூர், திருப்பத்தூரில் ஆசிரியரை கேலி செய்த 6 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு எழுத மட்டும் 6 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

10:26:02 on 22 Jan

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

'தேர்தல் காலத்தில் விவசாயிகளின் ஆதரவைப் பெற மாநில அரசுகள் மேற்கொள்ளும் வேளாண் ஆதரவு நடவடிக்கைகளால் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை கடுமையாக உயரும்,’ என்று இந்திய மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10:11:02 on 22 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

‘1980ஆம் ஆண்டுகளில் இருந்த வெஸ்ட்இண்டீஸ் அணியை போன்று தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி மிகவும் வலுவாக உள்ளது’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் பாராட்டினார்.

09:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

யமஹா நிறுவனம், எஃப்இசட் பிரிவில் புதிய மாடல்களில் பிரிமீயம் ரக பைக்குகளை அறிமுகப்படுத்தியது. முற்றிலும் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இவை, ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது.

09:41:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினமணி

ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் நாளை தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

09:26:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

முதல்வர் பழனிசாமியை, இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.14 லட்சத்தை முதல்வர் பழனிசாமியிடம் சிவன் வழங்கியுள்ளார்.

09:11:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில் பொருட்காட்சியும் நடைபெறவுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துக் கொண்டு நிறைவு உரை ஆற்றவுள்ளார்.

08:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க ie தமிழ்

சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த தனது அறிக்கையை ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம் வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது. இதில், ’சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:41:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சீனர்கள் தமிழ் படிப்பதற்கான காரணம் குறித்து, யுன்னான் மின்சு பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதி அளித்தப் பேட்டியில், ’தமிழ் மொழிக்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுமட்டுமின்றி, அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத்தில் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகிறோம்.’ என்றார்.

08:26:01 on 22 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜிப்ஸி’. இப்படத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வெரி வெரி பேடு’ (Very Very Bad) என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

08:11:35 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

08:11:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சிவகங்கையில் காரைக்குடி அருகே தம்பதி போல் நடித்து வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி பீரோவில் இருந்த பணம், நகைகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க EENADU

’மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாகத் தடை பெற வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

07:46:21 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற அஜித்-ஷாலினி காதல் திருமணத்தில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்பட கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வதை அஜித் குறைத்துக்கொண்டார்.

07:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

’தயாரிப்பாளர் சங்கத்தின் வரவு செலவு கணக்கைக் காட்ட வேண்டும். கணக்கு வழக்கைக் காட்டாமல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக்கூடாது. இளையராஜா பாராட்டு விழா நடத்துவது பற்றி சங்க உறுப்பினர்களிடம் விஷால் தெரியப்படுத்தவில்லை’ என தயாரிப்பாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

07:31:16 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர்,‘என்னை எந்தக் கட்சியினரும் போட்டியிடுமாறு கேட்கவில்லை,’ என கூறினார். மேலும், ‘அப்படி கேட்டாலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை,’ என தெரிவித்துள்ளார்.

07:25:02 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடந்த ஜூலை மாதத்தில் உலகளவில் ஒரே நேரத்தில் 20 பேர்களுக்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட செய்தியைப் பகிர முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. பின்னர் இந்த எண்ணிக்கையை ஐந்தாகக் குறைத்தது. தற்போது இந்தியாவைப் போன்றே பிற நாடுகளிலும் வாட்ஸ்அப் செய்தியைப் பகிரும் வாய்ப்பு ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளது.

06:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

விழுப்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கண்காட்சி மற்றும் பொருட்காட்சி ஆகிய இடங்களில், கண்களைக் கவரும் பனையோலையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பனைச் செய்து வருகிறார்.

06:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் விசாரணைக்காக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நாளைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரியுள்ளார். இதனை அடுத்து வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

06:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினத் தந்தி

18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. தகுதி நீக்கத்திற்கு ஆளானவர்கள் மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

05:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இந்த அரசு இருந்தால் தலைமைச் செயலாளரின் அறிக்கையை ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

05:35:02 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என லண்டனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தவறான தகவலை பரப்பியதாக சையத் சுஜா மீது டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது.

05:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’அரசியலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகர் அஜித்குமார் வெளிப்படையாகத் தெரிவித்தது பாராட்டுக்குரியது’ என்று கூறியுள்ளார். தொடந்து பேசிய அவர், நடிகர் அஜித் துணிச்சல்மிக்கவர், அஜித் வெளிப்படையாகப் பேசுவது தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

04:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மத்திய அரசு திட்டங்களில் 1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைவதாகவும், எஞ்சிய 85 சதவீதம் வீணாவதைத் தடுக்க முடியவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்து காங்கிரஸ் ஆட்சியின் திறன் இன்மைக்குச் சான்றாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

04:35:02 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்’ என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை’ என்றும் கூறியுள்ளார்.

04:31:48 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும்’ என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

04:10:22 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பொறியியல் நுழைவுத் தேர்வில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு தேசியத் தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

03:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டீசல் கார்களில், புதிய கருவியைப் பொருத்தியதாக ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் வோல்ஸ்வேகன் மீதான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், 'மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதா என பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

03:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க தின மலர்

டெல்லி செங்கோட்டையைப் பார்வையிட அனுமதி வழங்குவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

03:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ’ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்,’ என்றார். மேலும், ‘மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்,’ என கேட்டுக்கொண்டார்.

02:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

ரஷ்யாவின் கிர்ச் ஸ்ரைட் எனும் கடல் பகுதியில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு கப்பல் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையே நெருக்கடி நீடித்து வரும் நிலையில் இத்தகைய தொடர் விபத்துக்களால் மீண்டும் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

02:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க EENADU

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சோபியானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

02:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

’ஜனவரி 27ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும்,’ என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். மேலும், ’மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது பெரியார் சிலையை அங்கேயே வைக்க வேண்டும்,’ எனவும் கூறினார்.

01:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’அரசியல் குறித்து தனது நிலையை திறந்த மனதுடன் வெளிப்படுத்திய நடிகர் அஜித்தின் செயல் பாராட்டத்தக்கது,’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், 'யார் நினைத்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது, கொடநாடு விவகாரத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது,' என கூறினார்.

01:35:02 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்து விரிவான அறிக்கையை, 4 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

01:15:02 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலர் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்ட வீரர்களிடம் இருந்து திருட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கிளர்ச்சியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

தன்னையும் தன் 3 குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்ட கணவரை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி இளம் பெண் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். கைக்குழந்தையுடன் அவர் கதறி அழுதது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

12:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஏசியாநெட்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிராக மாணவர் கோகுல் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

12:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க, வரும் வியாழக்கிழமை (24/1/19) திமுக சார்பில் ஆளுநர் மாளிகையின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11:58:15 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஒருநாள் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி. ஐசிசியின் ஒருநாள் அணியில் கோலி, பும்ராவுடன் ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளனர்.

11:55:09 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா. இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது காயமடைந்தார். இதுகுறித்து பேசிய அவர், ’ஐபிஎல் தொடருக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு விடுவேன்,’ என தெரிவித்துள்ளார்.

11:55:02 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மேகதாது அணை விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

11:35:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன் என ஓபிஎஸ் விளக்கம் அளித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஓபிஎஸ் தனது வீட்டில்தான் சாமி கும்பிடலாமே தவிர கோட்டையில் எப்படி கும்பிட முடியும்?,’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

11:15:01 on 22 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க