View in the JustOut app
X

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ள சூசெக்ஸ் அரண்மனை வரும் வசந்தகாலத்தில் புது வரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. ஹாரி - மேகன் மார்கல் தம்பதியர் தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்துக்குப் பின்னர் அவர்கள் பிஜி தீவுக்கும் செல்கின்றனர்.

06:25:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது

06:22:51 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நந்தினி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் ராணி, சீரியலில் அவருக்கு கணவராக நடிப்பவர் நடிகர் சண்முகராஜன். இந்நிலையில் எம் 4 செங்குன்றம் காவல்நிலையத்தில் நடிகர் ராணி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.

06:10:03 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

'புதிய படங்களை திருட்டுத்தனமாக படம் பிடித்த 9 தியேட்டர்களுக்கு இனி எந்த ஒத்துழைப்பும் இல்லை,' என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், அக்.17,18இல் புதிய படங்களை இந்த 9 திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் கியூப் நிறுவனத்திற்கு கடிதம் அளித்துள்ளனர்.

05:55:07 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம், தொழில் முறையாகத் தண்ணீர் விநியோகம் செய்வதற்குத் தகுந்த அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் எடுப்பது சட்டப்படி குற்றம் என்று தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும், இன்று தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

05:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டிஸ்லெக்சியா, நரம்பியல் சம்பந்தப்பட்ட நிலைப்பாடு, மற்றும் கற்கும் விதத்தில் ஏற்படும் குறைபாடு. பிறவியில் ஏற்படும் இத்தகைய பிரச்சனை ஆரம்ப கால கண்டறிதல் முக்கியம் என்கின்றனர், இக்குறைபாடு உள்ள குழந்தைகளை பயிற்றுவிக்கும் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள்.

05:40:02 on 15 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சட்ட விதிகளுக்கு முரணாக அளவு குறைவாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்த, சென்னையில் 34 பங்குகள், கோவையில் 23 பங்குகள், திருச்சியில் 30 மற்றும் மதுரையில் 30 பெட்ரோல் பங்குகளில் விற்பனையைத் தடை செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளது தொழிலாளர் துறை.

05:39:25 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா மீது ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு அவர், அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தபோது, ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை மற்றும் சூதாட்டம் தொடர்பான ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் 2 வழக்குகள் பதிவுச் செய்துள்ளனர்.

05:26:40 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், ’அக்டோபர் 17ஆம் தேதி நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த முன்னோட்ட விஷயங்களை ஆலோசிப்போம்,’ என்று தெரிவித்தார். மேலும், ’கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட மாட்டாது,’ என்றும் தெரிவித்துள்ளார்.

05:25:02 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சென்னையில் உள்ள போஸ்ட் பாக்ஸ்களில் இருந்து 70க்கும் அதிகமான அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதாவது பிக்பாக்கெட் கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடிக்கும் பர்ஸ்களில் இருந்து பணத்தை மட்டும் எடுத்துவிட்டு பர்ஸை போஸ்ட் பாக்ஸ்களில் வீசிச் செல்கின்றனர்.

05:22:14 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர் பிரித்திவி ஷா தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரித்திவி ஷா பேட்டிங்கின் போது ஜேசன் ஹோல்டர் எடுத்த விக்கெட்டுக்கு அவுட் தராமல் பின்னர் ரிவியூவில் அது அவுட் என தெரிந்ததும் ஹோல்டரிடம் அம்பயர் இயான் கோல்ட் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

05:10:02 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

லெஸ்லி புயலின் கடும் தாக்குதலில் போர்ச்சுக்கல்லின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சுமார் 3 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

04:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க தி இந்து

புழல் சிறை நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் சுப்பையாவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுப்பிரிவு அறிக்கை வெளியீட்டுள்ளது. புழல் சிறையில் கைதிகளுக்குச் செய்யப்பட்ட வசதிகள் குறித்த தகவலை வெளியே கொண்டுவந்தவர் சுப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.

04:40:03 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

கடந்த 1994ஆம் ஆண்டு அசாமில் நடைபெற்ற போலி என்கவுண்டரில் தொடர்புடைய இந்திய ராணுவ வீரர்கள் ஏழு பேருக்கு, 24 வருடங்களுக்கு பிறகு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

04:25:03 on 15 Oct

மேலும் வாசிக்க EENADU

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

04:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் ஹான்ஸ் என்னும் புகையிலைப் பொருளைக் கேட்டு இளைஞர் ஒருவரை இருவர் அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவரும் போது பேருந்தில் சிக்கி அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

03:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்துள்ளார். காபுல் ஸ்வானை அணி வீரரான அவர் பல்கி லெஜன்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

03:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க ie தமிழ்

பத்திரிகையில் பணியாற்றிய போது தவறாக நடந்ததாக அகபர் மீது பிரியா ரமணி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து தமக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் பிரியா ரமணி பொய்ச் சொல்வதாக அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவதூறு தடுப்புச்சட்டத்தின் கீழ் பிரியா ரமணியை தண்டிக்குமாறு டெல்லி கோர்ட்டில் அக்பர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

03:25:02 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தன் ட்விட்டர் பக்கத்தில், “ தனித்துவமான ஆசிரியர், சிறந்த ஊக்குவிப்பாளர், ஆகச்சிறந்த விஞ்ஞானி, மிகப்பெரும் ஜனாதிபதியாக இருந்த கலாம், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் சிந்தனையில் வசித்து வருகிறார். பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூறுகின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.

03:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

'ஆளுநர் மாளிகை பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு மையமாக உள்ளது. இதுவரை யாரிடமும் பணமோ, பொருட்களோ பெறப்படவில்லை,' என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். மேலும், ’ஆளுநர் மாளிகைக்கு வரும் சால்வை, பரிசுப்பொருட்களும் கூட ஏழை மக்களுக்கு அளிக்கப்படுகிறது,’ என தெரிவித்தார்.

03:03:12 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜக மாநில தலைவர் தமிழிசை, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘சர்கார் என்ற தலைப்பை வைத்துள்ளவர்களுக்கே நல்லது செய்ய ஆர்வம் உள்ளபோது சர்காரை வைத்துள்ள நாங்கள் எவ்வளவு நல்லது செய்வோம்,’ என கூறினார்.

02:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரின் வீட்டின் முன் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் புகாருக்கு உள்ளான எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

02:40:02 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் முதல் வடக்கு உள் கர்நாடகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது.

02:25:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் நேற்று நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் 16.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக சென்னையில் 1,09,494 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற இறுதிக்கட்ட முயற்சியில் கேரள அரசு இறங்கி உள்ளது. இதற்காக தந்திரி குடும்பத்தினர், பந்தள அரண்மனை பிரதிநிதிகள், ஐயப்பா சேவா சங்க தலைவர்கள் ஆகியோரை நாளை நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைத்துள்ளது.

01:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க தின மலர்

பாடகி சின்மயி சுசிலீக்ஸ் பற்றிய உண்மையைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவுசெய்து பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னைப் பற்றி தவறாக பேசினார். அதில் உண்மை இல்லை’ என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

01:41:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகம் முழுவதிலும் சிலைக்கடத்தல் மற்றும் போலி சிலைகள் தொடர்பான வழக்கினை ஜ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மைலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலில் 3 சிலைகள் காணாமல் போன புகாரையடுத்து சிலை தடுப்புப்பிரிவு போலீசார் 4வது நாளாக கோயில் அர்ச்சகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

01:34:16 on 15 Oct

மேலும் வாசிக்க EENADU

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் கைதான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு கேரள உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதில், பிராங்கோ முல்லக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது, அவர் தனது பாஸ்போர்ட்டை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், சாட்சியங்களை கலைக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

01:29:59 on 15 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

’தமிழ் மொழிக்கு பிரதமர் செய்த நன்றியை மறப்பது ஏற்புடையதல்ல’ என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர், ’உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்று கூறிய பிரதமருக்கு தமிழர்கள் யாரும் நன்றி தெரிவிக்கவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

01:26:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’விஜயகாந்த்தும், நானும் நல்ல நண்பர்கள், அரசியல் என்ற ஒன்று எங்களைக் காயப்படுத்தி இருவரையும் பிரித்துவிட்டது,’ என்று நடிகர் டி.ராஜேந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

01:24:34 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’தமிழை மொழியாகக் கருதாமல் உயிராகக் கருதுபவர்கள் தமிழர்கள்’ என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் ’திராவிட மொழி குடும்பம் மிகவும் பழமையானது, அதிலும் தனிச்சிறப்பு கொண்ட தொன்மையான மொழி தமிழ்’ என்றும் கூறியுள்ளார்.

01:12:57 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

வீடுகளுக்கு மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மகாராஷ்டிர மாநில கலால் வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்திருந்தார். இந்நிலையில், மதுபானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

01:11:02 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ’பாலியல் துன்புறுத்தல் என்பது திரைத்துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது’ என கூறியுள்ளார். மேலும் அவர், ’மாணவர்களுக்கும் தனக்கும் இடையே நடக்கும் உரையாடலை யாரும் தடுக்க முடியாது’ என்றும் கூறியுள்ளார்.

01:06:26 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் நதி நீர் பகிர்வு பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நதி நீர் படுகை மேலாண்மைச் சட்ட மசோதா வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

12:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

பெங்களூருவின் புறநகரான அக்ரஹாரா தசாரஹல்லி என்கிற இடத்தில் இருக்கும் ஹாவனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ரங்கநாதன். நேற்று அவர் 10வது படிக்கும் 20 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது, 6 பேர் கொண்ட மர்மக் கும்பல், ரங்கநாதனை சரமாரியாகத் தாக்கிக் கொன்றுள்ளது.

12:41:02 on 15 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பில்லா பாண்டி வெளியாவதை முன்னிட்டு அஜித்தைச் சந்தித்தார் ஆர்.கே.சுரேஷ். அப்போது அவரிடம் எதற்கும் கருத்து சொல்லாத உங்களுக்கு எப்படி இத்தனை ஆத்மார்த்தமான ரசிகர்கள்? இதற்கு என்ன காரணம்? என்று கேட்டிருக்கிறார். நாயகனில் நீங்க நல்லவரா கெட்டவரா கேள்விக்கு கமல், தெரியலேப்பா என்பாரே, அதேபோல் தெரியலையே ஜி என்றிருக்கிறார் அஜித்.

12:40:35 on 15 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

Cryogenic ராக்கெட் இன்ஜினை நினைவுகூரும் விதமாக, ஹேரியரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜினுக்கு Kryotec எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையே ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பிரிமியம் எஸ்யூவியின் புக்கிங், இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது.

12:26:01 on 15 Oct

மேலும் வாசிக்க விகடன்

மன்னார்குடியில் தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர் டி.எம்.ஏ. மனோகரனின் வீடு, அவருக்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் விடுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை சோதனை நடத்தி வருகின்றனர்.

12:25:15 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருப்பூரில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஏராளமான விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். ’இடைமலையாறு அணை திட்டத்தை 33 ஆண்டுகளுக்கு முன் கேரளா நிறைவேற்றி விட்டது. கேரளாவிடம் பேச்சு நடத்தி ஆனைமலையாறு அணை, நல்லாறு அணையை கட்டித் தர வேண்டும்’ என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

12:21:13 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏஐ 864 என்ற விமானத்தில் இருந்து பணிப்பெண் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை மருத்துவமனயில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

12:11:02 on 15 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து பாடகி சின்மயி மீது ஏன் மான நஷ்ட வழக்கு தொடரவில்லை? என அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் சிறப்பு சட்டம் கொண்டுவந்து மத்திய அரசு கோயிலைக் கையகப்படுத்துவதே பெண்களை அனுமதிக்காமல் இருப்பதற்கான ஒரே வழி எனவும் கூறியுள்ளார்.

11:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7

சேலம் மாவட்டம் குகை என்ற பகுதியில் காயத்ரி என்பவர் மீது சீனிவாசன் என்பவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். கணவரைப் பிரிந்து வாழும் காயத்ரி மீது அமிலத்தை வீசி விட்டு தப்பிய சீனிவாசனை போலீஸ் தேடுகிறது. அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

11:45:29 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

குஜராத் மாநிலத்தில் வரும் 31ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் குஜராத் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசாத்.

11:40:42 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் கேட்டிருந்தனர். இந்நிலையில், நவம்பர் 30ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடார்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

11:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த பல்சர் பாபு என்பவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிறையிலிருந்த பாபுவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காவலரின் பல்சர் வாகனத்தோடு அவர் தப்பி விட்டார்.

11:37:47 on 15 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் எண்ணெய் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

11:25:02 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலவச பயண அட்டை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை மாணவர்கள் முன்வைத்துள்ளனர். இலவச பயண அட்டை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

11:10:03 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் போராட்டத்தின்போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி சிபிஐ நேற்று விசாரணையத் தொடங்கியது. இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

10:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டில்லி சானக்புரி பகுதியில் உள்ள தேசிய போலீஸ் நினைவு சின்னம் வளாகத்தில் போலீஸ் அருங்காட்சியகம் அமைய உள்ளதாக போலீ்ஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி வரும் 21ஆம் தேதி துவக்கி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

10:41:01 on 15 Oct

மேலும் வாசிக்க தின மலர்

திருவாரூரில் 3ஆம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெற்றோர் அளித்த புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், கட்டடத் தொழிலாளி தென்கோவனைக் காவல் துறையினர் போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடத்தனர்.

10:25:04 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,258 கனஅடியில் இருந்து 7,644 கனஅடியாகக் குறைந்தது. மேலும், அணையின் நீர்மட்டம் 103.82 அடியாகவும், நீர் இருப்பு 69.88 டிஎம்சியாகவும் உள்ளது.

10:10:02 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 71 அடியை எட்டிய நிலையில், இன்று அணையின் நீர்மட்டம் 66ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரை மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

09:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

இன்று டாக்டர் APJ அப்துல் கலாமின் 87வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஒளியூட்டப்பட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ராகவ ராவ் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

09:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகர் கமலஹாசனுக்கு இன்றும் கனவு நாயகனாகத் திகழும் 'மருத நாயகம்' பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்த்துத் தன்னை 'சுதந்திர ஆட்சியாளன்' என்று அறிவித்துக் கொண்டதற்காக, தொழுகையின்போது நயவஞ்சமாகக் கைது செய்யப்பட்டு, மதுரையில் கடந்த 1764ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார்.

09:26:01 on 15 Oct

மேலும் வாசிக்க EENADU

சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான 1,750 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:11:01 on 15 Oct

மேலும் வாசிக்க தின மலர்

சென்னை பாரிமுனையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மான் கொம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மான் கொம்புகளை சாலையில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை மண்ணடியில் நேற்று ரூ.3 லட்சம் மதிப்புள்ள மான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

08:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

ஹோடேய்டா மாகாணத்தில் உள்ள ஜபால் ராஸ் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது திடீர் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பேருந்தில் பயணம் செய்த 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

08:41:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

08:26:02 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், முதல் மற்றும் 2வது இன்னிங்க்ஸ் இரண்டையும் சேர்த்து உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோன்று முதல் டெஸ்ட் போட்டியில் 134(154), 2வது டெஸ்ட் போட்டியில் 70(53) மற்றும் 33(45) ரன்கள் குவித்த பிருத்வி ஷா தொடரின் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

08:11:02 on 15 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அறிவியல் ஆசிரியர், அணு விஞ்ஞானி, குடியரசுத் தலைவர், கனவு நாயகன் என பன்முகங்கள் கொண்ட ஏபிஜே அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார். இன்று அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாடப்படுவது போல், அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஒளியூட்டப்பட்டது.

07:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவில் எண்ணெய், எரிவாயு ஆய்வில் ஈடுபடுவதற்கும், இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவின் விலையைக் கட்டுப்படுத்துவது பற்றி பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

07:41:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்க வாய்ப்பிருப்பதால் வாலட்டைலிட்டி தொடரும் என்றே எதிர்பார்க்கலாம். எனவே அனைத்து விதமான டிரேடர்களும் இன்றைக்கு முழுமையாக டிரேடிங் செய்வதை தவிர்ப்பதே நல்லது எனலாம்.

07:26:01 on 15 Oct

மேலும் வாசிக்க விகடன்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

07:10:02 on 15 Oct

மேலும் வாசிக்க தின மலர்

மீ டு இயக்கம், சமூகத்தின் பிரதிபலிப்பு என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நல்ல கல்விதான் நாட்டிற்கு மிகவும் முக்கியம் என்றும், இந்தியர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

06:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

2019ஆம் ஆண்டு அலகாபாத் கும்ப மேளா வரவுள்ளதை அடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தினை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சிக்கு வருவோருக்கு ஏதுவாக 1 லட்சத்திற்கும் மேலான கழிவறைகள் கட்டித் தரப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

06:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ஒரே பாத்திரத்தில் அதிக எடைக் கொண்ட கிச்சடியைச் சமைக்கும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தொடங்கி வைத்தார். இதில், செஃப் விஷ்ணு மனோகர் ஒரே பாத்திரத்தில் 3000 கிலோ எடைக் கொண்ட கிச்சடியை சமைத்து சாதனை படைத்தார்.

06:25:02 on 15 Oct

மேலும் வாசிக்க EENADU

”திடீர்ன்னு அரசியல் நிலைப்பாடு எடுத்த கமல்ஹாசன் சட்டுன்னு கட்சி துவங்கி களமிறங்கிப் போயிட்டே இருக்கார். ஆனால் இந்த தைரியம் ரஜினியிடம் இல்லையே. ரஜினி, பல வருஷமா இந்த கதையை சொல்லிட்டே இருக்கிறாரே தவிர, இதுவரைக்கும் கட்சி தொடங்கலை.” என்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

06:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

மத்திய மற்றும் வடக்கு போர்ச்சுகல்லை லெஸ்லி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி துடைத்தெறிந்துவிட்டது. நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்துள்ளன, சுமார் மூன்று லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் அங்குள்ள கலையகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

05:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வாடாமல்லி பூக்கள், இலைகளைத் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து, அந்த நீரில் கண்களை கழுவி வந்தால், கண்களில் ஏற்படும் சிவப்புத் தன்மை, மற்றும் அரிப்பு சரியாகும்.

05:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு மேகாலயா மாநிலம் ஷில்லாங் ஐ.ஐ.எம். கல்வி நிலையத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை கூறும் பயோபிக் திரையிடப்படுகிறது.
இந்த பயோபிக்கை நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம் தயாரித்துள்ளது.

05:26:01 on 15 Oct

மேலும் வாசிக்க என்.டி.டி.வி தமிழ்

நோட்டாவை ஓட்டாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன் என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தற்போது உள்ளவர்கள் மூட்டை கட்டுவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

05:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமலர்

அசுஸ் நிறுவனம் அக்டோபர் 17ஆம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுவரை அந்நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய சாதனம் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் அசுஸ் நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

04:56:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

அரியலூர் மாவட்டம் பாலம்பாடியில், ஆடுமேய்த்துக் கொண்டிருக்கும் தாயைக் காண சென்ற சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். தாய் அளித்த புகாரின்பேரில் மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

04:40:02 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மிகப்பெரிய திரையரங்க நிறுவனமான பிவிஆர், சென்னை அண்ணா நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வீ.ஆர் சாப்பிங் மாலில் 10 திரைகள், 2594 இருக்கைகள் வசதி கொண்ட திரையரங்கம் ஒன்றை திறந்தது.

04:26:01 on 15 Oct

மேலும் வாசிக்க EENADU

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, நெட்பேங்கிங் வசதியைப் பெற செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதிக்குள் எண்ணை இணைக்கவில்லை என்றால், அதற்கு பின்னர் நெட்பேங்கிங் வசதி முடக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

04:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் தாய்லாந்தில் அறிமுகம் செய்த நிலையில், விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

03:56:02 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில், வைரமுத்து விவகாரம் குறித்து தன் கருத்தைக் கூறினார். இது குறித்து நடிகர் சித்தார்த், “சீமானுக்கு கடுமையான கண்டனங்கள். சிறுமதி உடையவர்கள், பெண் வெறுப்பாளர்கள் சமூகத்தின் எல்லா தளத்திலும் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என தெரிவித்துள்ளார்.

03:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் அணை பகுதியில் மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரவீன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய ராமராஜ், பாண்டி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

03:26:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

வடகிழக்கு துருக்கியில் உள்ள ஒரு கிராம மக்கள் 300 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறி உள்ளனர். புதையல் தேடும் கொள்ளையர்களால் அந்த வளைவுப்பாலம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்ஸ்லான்ஸா கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள்.

03:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சலீம் பட்டேல் ஜர்னலிஸம் படித்து, தற்போது பிபிசியில் பணியாற்றி வருகிறார். இவர் பார்வை குறைபாடு கொண்டவர். இன்னும் சில வருடங்களில் பார்க்கும் திறனை அவர் மொத்தமாக இழந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. அவர் சாலையைக் கடப்பதற்கும், சரியான இடத்துக்கு அழைத்துச் செல்லவும் குதிரைக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

02:56:01 on 15 Oct

மேலும் வாசிக்க விகடன்

மும்பையில் தொலைக்காட்சி ஊடகவியலாளராக செயல்பட்டு வருபவர் ஹெர்மன் கோம்ஸ். ஹெர்மன் மற்றும் அவரது நண்பரை ஞாயிறு அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடுமையாகத் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

02:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா, “எல்லா விஷயம் தொடர்பாகவும் பேசும் பிரதமர், இப்போது மீடூ தொடர்பாக அமைதியாக இருக்கிறார். அவருடைய அமைதியானது, பிரதமர் அலுவலகத்தின் மாண்பு மீது கேள்வியை எழுப்புகிறது. அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று தேசம் காத்திருக்கிறது,” என்று கூறியுள்ளார்.

02:26:02 on 15 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜனநாயக முறையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

02:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

பொதுமக்களுக்கு மானியங்களை வழங்குவதற்காக ஆதார் போன்ற ஒரு முறையைக் கொண்டுவர உள்ளதாக மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார். ஒருவரே இருமுறை மானியம் பெறுவதையும் மோசடிகளையும் தடுக்க இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

01:56:01 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மத்தியப் பிரதேச மாநிலம் ஹோசங்காபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ”மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, அடுத்த 50 ஆண்டுகளுக்கு பஞ்சாயத்துலிருந்து பார்லிமென்ட் வரை பாஜகவின் கொடியைப் பறக்க வைப்போம்.” என்றார்.

01:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமலர்

சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறிய சிவபால் யாதவ், சமாஜ்வாதி மதச்சார்பற்ற மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில், சிவபால் யாதவ் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா, சமாஜ்வாதி மதச்சர்பற்ற மோர்ச்சாவை மேலும் வலுவடைய செய்ய உறுதுணையாக இருக்கப் போவதாக தெரிவித்தார்.

01:26:02 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தேவதாசியின் கதைகளில் ஒரு சிறு துளியைப் பதிவு செய்யும் முயற்சிதான் நித்யசுமங்கலி குறும்படம். தேவதாசிகள் கதை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டே வருகிறது. ஆனால் அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரைச் சேர்ந்த தமிழரான இளம்பெண் லட்சுமி பூஜா இந்தப் படத்தை இயக்குகிறார்.

01:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

ஒரு பொருளையோ, மனிதர்களையோ பார்த்து ஓவியமாக தீட்டுவது சாதாரணமான விஷயமல்ல... அது ஒரு அச்சுப்பிசகாமல் நகலெடுக்கும் அற்புதக்கலை. அந்த ஒரு கலையை தேங்காய் ஓடுகளில் தீட்டி நம்மை அசர வைக்கிறார் திண்டுக்கல் மாவட்ட அளவில் சிறந்த ஓவிய நல்லாசிரியருக்கான விருதை பெற்ற ஆசிரியர் சபரிநாதன்.

12:56:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

ரஷ்யாவைச் சேர்ந்த 129 வயதான கோக்கு இஷ்டாம்புலோவா, உலகின் மிக வயதான பெண்மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். செசன்யா பகுதியைச் சேர்ந்த அவர், இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்ததாகவும், இரண்டாம் சார் நிக்கோலஸ்சின் முடிசூட்டு விழாவில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

12:40:01 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்காவில் உள்ள பர்லிங்க்டன் நகரில் வசிக்கும் சிந்தியா பீட்டர்சன் தனது செல்ல நாயான ஃபின்னுக்கு புற்றுநோய் இருப்பதையும், அது மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பதையும் அறிந்தபின் தனது கணவர் ராபர்ட் பீட்டர்சன் உடன் இணைந்து ஃபின் இறப்பதற்கு முன் அனுபவிக்க வேண்டிய கடைசி மகிழ்ச்சியான தருணங்களின் பட்டியலை உருவாக்கியுள்ளார்.

12:26:02 on 15 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான விஜயலட்சுமி அடுத்ததாக, சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் தான் நடிக்கவுள்ளதாகவும் வெங்கட் பிரபு தயாரிப்பில் அப்படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

12:10:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு மாதாந்திர டீசல் உபயோகம் குறைந்திருக்கிறது. மொத்த எரிபொருளில் டீசலின் பங்கு 40 சதவீதம் ஆகும். இதன் பயன்பாட்டில் 0.8 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:56:01 on 14 Oct

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றபோது, அங்கு அப்போதைய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இருந்தபோதிலும்கூட ஏன் அரசமைப்புச் சட்டம் 355 பிரிவு அமல்படுத்தப்படவில்லை என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

11:40:01 on 14 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கன்னட சினிமாவில் உரிமை மற்றும் சமத்துவத்துக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பில் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க குழு ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதில், நடிகர் சேதன் குமார், நடிகைகள் பிரியங்கா உபேந்திரா, ஸ்ருதி ஹரிஹரன், இயக்குனர் கவிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

11:26:01 on 14 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

விளையாட்டில் சிறந்து விளங்கும், பெரம்பலூரைச் சேர்ந்த மாணவி ராஜமாணிக்கத்துக்கு தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் சிறப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. மாணவி ராஜமாணிக்கத்துக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் கிராமப்புறத்திலிருந்து வரும் மாணவிகளுக்கு, குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தந்துள்ளது.

11:10:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பருக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

10:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினகரன்

‘தேவர் மகன்2’ செய்திகள் சூடுபிடித்துருக்கும் நிலையில், 'கமல் மிகவிரைவில் மருதநாயகம் படத்தையும் துவங்குவார். அதில் எனக்கு ஒரு நல்ல கேரக்டரும் கேட்டிருக்கிறேன்’ கமலின் லேட்டஸ்ட் ஆஸ்தான நாயகியான பூஜாகுமார்.

10:40:01 on 14 Oct

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

திருவள்ளூரில் பாதிரிவேடு பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளைப் பாதிரிவேடு போலீசார் சுற்றி வளைத்து கைதுச் செய்தனர். அவருடன் பினுவின் கூட்டாளி பிரகாஷும் கைதுச் செய்யப்பட்டார்.

10:26:02 on 14 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

ஜார்கண்ட் அணிக்காக தோனி ஆடுவார் என வெளியான தகவலை மறுத்த ஜார்கண்ட் பயிற்சியாளர் ராஜிவ் குமார், "உங்களுக்குத் தெரியும் அவர் தன் முடிவுகளைத் தானே எடுப்பார். வீரர்கள் நன்றாக ஆடிவருகின்றனர் ஆகவே ஒரு போட்டிக்காக வந்து வேறொருவர் இடத்தைப் பறித்துக் கொண்டு ஆட வேண்டிய அவசியமில்லை என்று தோனி கூறினார்,” என தெரிவித்தார்.

10:10:02 on 14 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

குருவித்துறை குருபகவான் கோயிலில் 4 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. பெருமாள், பூதேவி, சீனிவாசா, குரு உள்ளிட்ட 4 சிலைகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க