View in the JustOut app
X

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த மானியமில்லாத சிலிண்டர் விலை கடந்த மார்ச் மாதம் குறையத் தொடங்கியது. அதன்படி சென்னையில் இன்று முதல் மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை 64.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதம் ரூ.826 ஆக விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை, ரூ.761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

05:57:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினமலர்

கொரோனா அச்சுறுத்தலால் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான, அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், PM CARE FUND-க்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு, முழு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:27:01 on 01 Apr

மேலும் வாசிக்க தந்தி டிவி

கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைகின்றன. அதனால், கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கிக்கிளைகள், இனிமேல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளைகளாக செயல்படும். சிண்டிகேட் வங்கி, இன்று கனரா வங்கியுடன் இணைகிறது. இனிமேல், சிண்டிகேட் வங்கிக்கிளைகள், கனரா வங்கிக்கிளைகளாக செயல்படும்.

09:27:02 on 01 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட தேவைக் குறைவு மற்றும் விநியோகம் செய்வதில் உள்ள தடைகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைவதால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது கடினமாவதோடு மட்டுமல்லாமல், 13.6 கோடி வேலைவாய்ப்புகள் உடனடி ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

08:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஊரடங்கு உத்தரவால் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. வட்டி வசூலிக்கப்படாது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவு குறித்த தகவல்கள் அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

03:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க தினகரன்

உலகமெங்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஒன்று உண்டென்றால் அது சந்தேகத்திற்கிடமின்றி N95 முகக்கவசம்தான். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள தருணத்தில் மருந்து நிறுவனமாக 34 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம் இப்போது லாபகரமான தொழிலாக முகக்கவசம் உற்பத்தியை மாற்றி பணத்தை சம்பாதித்து வருகிறது.

11:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க விகடன்

ஆணுறை தயாரிப்பில் மலேசியா மிகப்பெரிய அளவில் உற்பத்தி மேற்கொள்ளும் நாடாக விளங்குகிறது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியாவில் பல ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்னும் சில மாதங்களில் உலக அளவில் அனைத்து நாடுகளிலும் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

04:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி அளிப்பதாக ரத்தன் டாடா அறிவித்தார். இந்நிலையில், தற்போது டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினமணி

”2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலையை விட இனி வரும் காலங்கள் மோசமாக இருக்கும். உலகமே பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்துள்ளது என்பது தெளிவாகிறது" என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா என எச்சரித்துள்ளார்.

12:27:02 on 28 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனா வைரஸ் நொய் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சாதனங்களுக்கான வாரண்டியும் 30 நாட்கள் வரை நீட்டிக்கப்படுவதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

07:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அனைத்து கடன்களின் தவணைகளும் 3 மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், விளைச்சல் அமோகமாக உள்ளதால் வரும் நாட்களில் உணவு பொருட்களின் விலை குறையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

11:12:07 on 27 Mar

மேலும் வாசிக்க தினகரன்

நீரழிவு நோயாளிகள் 2 மேஜைக்கரண்டி நெல்லிக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஆஸ்துமா நோயும் குணமாகிவிடும்.

06:55:01 on 27 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மூடப்படுவதற்கு முன்பு ஆறு மணி நேரத்தில் 210 கோடி மதிப்புள்ள மது விற்பனையாகி உள்ளது.

03:18:00 on 26 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மூடப்படுவதற்கு முன்பு ஆறு மணி நேரத்தில் 210 கோடி மதிப்புள்ள மது விற்பனையாகி உள்ளது.

03:03:05 on 26 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மூடப்படுவதற்கு முன்பு ஆறு மணி நேரத்தில் 210 கோடி மதிப்புள்ள மது விற்பனையாகி உள்ளது.

02:57:53 on 26 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜெங்கா (Zenga) பயிற்சிகளை ஒரு மணி நேரம் செய்தாலே அதிகபட்ச கலோரிகளை எரித்துவிட முடியும். முழு உடலுக்குமான உறுதித்தன்மை, ஆரோக்கியமான சுவாசம் மற்றும் தசைகளின் சத்திவாய்ந்த இயக்கங்கள் என முழுமையான பலன் கிடைப்பதால், இந்த பயிற்சியை உற்சாகத்தோடு செய்யும் ஒருவரின் இளமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

05:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

'கொரோனா வைரஸ் பரவல் பீதியை தொடர்ந்து, வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை, வங்கிகள் மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும்' என, தமிழகத்தின், மாநில அளவிலான வங்கிகள் குழு அறிவித்துள்ளது.

10:27:02 on 25 Mar

மேலும் வாசிக்க தினமலர்

கொரோனா அச்சுறுத்தால் காரணமாக பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான FLIPKART தனது சேவையை தற்காலிக நிறுத்தியுள்ளது. 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரட்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளதை அடுத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

09:21:01 on 25 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா காரணமாக அனைத்து தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெபிட் கார்டு மூலம் எந்த வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலும் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது எனவும், வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு அளிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

06:27:01 on 24 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து வருகிற 31ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில்வே துறைக்கு கடும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. 31ஆம் தேதி வரை ரெயில் சேவை நிறுத்தப்பட்டால் ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்திக்க வேண்டியது வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

04:27:01 on 24 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 31,688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ஐந்து ரூபாய் குறைந்து 3,961 ரூபாய்க்கும், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து 40.70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

11:37:30 on 23 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.76ஐ தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2991.85 புள்ளிகள் சரிந்துள்ளது.

10:19:20 on 23 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடந்த ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் செலுத்திய மின் கட்டண தொகை அளவையே மார்ச் மாத மின்கட்டணமாக கட்டலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கூடுமானவரை மக்கள் கூடுதலை தவிர்க்க அரசு வலியுறுத்தியுள்ள நிலையில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

07:59:38 on 22 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கரோனா வைரஸால் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், சிறு குறு நடுத்தர நிறுவனங்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் எஸ்பிஐ சிறப்பு கடன்திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கரோனாவால் தொழில் பாதிப்பைச் சந்தித்தவர்களுக்கு 7.25 சதவீத வட்டியில் சிறப்புக் கடன்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

03:57:01 on 22 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மார்ச், 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 48 ஆயிரத்து, 189 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய மதிப்பில், 36.14 லட்சம் கோடி ரூபாய். இதற்கு முன், இருப்பு, அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது தற்போது குறைந்துள்ளது.

10:27:01 on 22 Mar

மேலும் வாசிக்க தினமலர்

கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். நாடு முழுக்க இதே நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.

08:57:01 on 22 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திடீரென வீட்டில் இருந்து வேலை செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க ஆன்லைன் தளங்களையே நம்புகின்றனர் இதனாலும் ஆன்லைனில் ஆர்டர்கள் குவியத் தொடங்கி உள்ளன.

08:27:01 on 20 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கொரோனா பாதிப்பு காரணமாக பிராய்லர் கோழி, முட்டைகளை விரும்பாத மக்கள் மீன் உணவை நாடத் தொடங்கியுள்ளனா். இதனால், விளா மீன் கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.500-க்கு உயா்ந்துவிட்டது. சீலா மீன் கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.1000 வரை விற்கப்படுகிறது. நண்டு ரூ.500-க்கும், கணவாய் ரூ.400, நெத்திலி ரூ.300 என்ற விலையில் விற்கப்படுகிறது.

03:57:01 on 20 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சாம்சங் கேலக்ஸி எம் 21 இந்தியாவில் மார்ச் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.4 ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ், 12,999 ரூபாய்.6 ஜி.பி ரேம்+ 128 ஜி.பியின் விலை குறித்து தகவல் இல்லை. எனினும் இரண்டிற்குமே அதிகாரப்பூர்வ விலை வெளியாகவில்லை.

07:57:02 on 19 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஸ்விக்கி, சொமோட்டோ என ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் எவ்வளவு வந்தாலும் மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் டப்பாவாலாக்களை மிஞ்ச ஆள் இல்லை. ஆனால் இந்த கொடூர கொரோனாவால் அவர்களும் தங்களது வேலையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டுள்ளனர். மார்ச் 31 வரை தொழிலில் ஈடுபடமாட்டோம் என டப்பாவாலாக்கள் அறிவித்துள்ளனர்.

05:27:01 on 19 Mar

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

கொரோனா வைரஸ் பரவுலை கட்டுப்படுத்த விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இந்திய சுற்றுலாத் துறைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

08:27:01 on 18 Mar

மேலும் வாசிக்க தினகரன்

பிராய்லர் கோழியின் விலை குறைந்து கொண்டே செல்கிறது. அதன் பாதிப்பு தற்போது முட்டைகளிலும் பிரதிபலித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக 15 கோடி முட்டைகள் தேங்கியதாக தெரிகிறது. இதனால் முட்டையின் கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து தற்போது ரூ.1.95 விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

02:08:12 on 18 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா காரணத்தினால் அமேசான் தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஒரு பக்கம் அரசாங்கம் மக்களை தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் போது, அமேசான் நிறுவனம் பிரிட்டனில் உள்ள தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கூறி உள்ளது.

12:57:01 on 18 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வோடபோன் ரூ. 218 சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இதே போன்று ரூ. 248 சலுகையில் 8 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.

05:15:39 on 17 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

கொரோனா வைரஸ் உயிர்கொல்லியின் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதேபோல் அமெரிக்காவில் வீடுகளுக்குள் முடங்கி உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் மூலம் பெற்று வருகிறார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் தேவைப்படுவதாக அமேசான் அறிவித்துள்ளது.

04:57:02 on 17 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் கூறினார். மேலும், மக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்களை சந்திப்பதால் 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளன என்றார்.

10:57:01 on 17 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மேலும் வாசிக்க