View in the JustOut app
X

நடிகை ஸ்ரீ ரெட்டி புதிதாக யூடுயுப் சேனலை ஆரம்பித்துள்ளாராம். இதற்காக அவர் ஆண்குறி என பொருள் படும் ஆங்கில வார்த்தையை பதிவிட்டு தன்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து ஆபாசமான பதிவுகளை இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டு வருகிறார்.

10:57:02 on 01 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூருக்கு 5-வது தடவையாக பரிசோதனை செய்தனர். இப்போதும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதையே முடிவுகள் வெளிப்படுத்தின. ஆனாலும், அவரது உடல்நிலை கவலைப்படும்படி இல்லாமல் சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

09:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இருந்து பொளக்கட்டும் பற பற என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதிக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகப் பாடலாகும்.

07:25:01 on 01 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சுனைனா. இவர் தற்போது காதலில் உள்ளார். அவர் வேறு யாருமில்லை விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா தானாம். இன்னும் 3 மாதத்தில் அவரை திருமணம் செய்யவுள்ளதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியுப் சேனலில் கூறியுள்ளார்.

12:57:01 on 01 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது அமலாபாலுக்கும் வழங்கப்படுகிறது.

09:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

கரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் 130 கோடி மக்களும் சக்திமானை காண வாய்ப்பு கிடைக்கும். அறிவிப்புக்காக காத்திருங்கள் என வீடியோவுடன் ட்வீட் செய்துள்ளார்.

05:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க Asiavillenews

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அரவிந்த் கிருஷ்ணா. இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்த படம் 'திருடன் போலீஸ்'. புதுப்பேட்டை படத்துக்கு பின், அதாவது 2006ம் ஆண்டு இப்படத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் கைவிட்டப்பட்டது.

01:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

அஜித் ரசிகர்கள் என்ற பெயருடன் தன்னை ட்விட்டரில் விமர்சிப்பவர்களுக்கு நடிகை குஷ்பு காட்டமாக பதிலளித்துள்ளார். டுவிட்டரில் தன்னை விமர்சித்த ஒருவருக்கு, “உன்னைப் போன்ற ஒருவரை ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு அஜித் வெட்கப்படுவார்” என்று காட்டமாக பதிலளித்திருந்தார்.

01:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. இப்படம் விஜய் திரைப்பயணத்தையே மாற்றியமைத்தது. உண்மையாகவே முருகதாஸ் இப்படத்தின் கதையை சூர்யாவிடம் தான் சொன்னாராம். அவரால் அந்த சமயத்தில் இந்த படத்தை செய்ய முடியாமல் போனதாம்.

12:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

கஸ்தூரிராஜா, செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் துள்ளுவதோ இளமை. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ஷெரின். இதன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஷெரின் வெளியிட்டுள்ளார்.

07:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தீனா படம் அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இப்படத்திற்கு பிறகு தான் முருகதாஸ் மார்க்கெட் உயர ஆரம்பித்து. அஜித்தையும் எல்லோரும் தல என்று அழைப்பார்கள், அந்த அளவிற்கு அவர் மீது அன்பு வர இந்த படமே காரணம். இப்படத்திற்காக முருகதாஸிற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை ரூ 1000 தானாம்.

03:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பைச் சேர்ந்த விமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றதோ, அதே போல் தோளில் ஒரு எந்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.

07:55:01 on 30 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியாவில் மக்கள் நலனுக்காக அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையான நடவடிக்கைகளுடன் விதித்துள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகர் ரிஷி கபூர், மதுக்கடைகளை தினமும் சில மணி நேரமாவது திறந்து வைக்க வேண்டுமென அரசுக்கு வேண்டுக்கோள் வைத்துள்ளார்.

06:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

09:55:01 on 29 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து தொழில்கள் போலவும் சினிமா, சின்னத்திரை வேலைகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் டிவி சானல்களும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட தொடர்களை முக்கிய பகுதிகளாக கட் வெர்சனாக ஒளிபரப்ப தொடங்கிவிட்டன. இதனால் வருமானம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

03:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று (மார்ச் 29) மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

09:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினமலர்

பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா சஞ்சய் மிஷ்ராவுடன் இணைந்து காஞ்ச்லி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் தன்னார்வலராக இணைந்து செவிலியர் பணி செய்து வருகிறார்.

06:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு உணர்த்தும் வகையில், நடிகர் ஜீவா என்று இருந்த தனது டுவிட்டர் ஐடியையே உள்ளே போ என்று பெயர் மாற்றியிருக்கிறார்.

10:57:02 on 28 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “19க்கு பிறகு ஷூட்டிங் நிறுத்தப்பட்ட பிறகு அத்தனை சானல்களிலும் ஒரு எபிசோட் கூட தடைபடாமல் சீரியல் வருகிறது. முன்பே எடுக்கப்பட்டதா? ஊரடங்கு தடை மீறி எடுக்கிறார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

05:27:02 on 28 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி, தற்போது இயக்கி வரும் தனது RRR படத்தில் விஜய்யை கெஸ்ட் ரோல் நடிக்க அனுகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய் மட்டும் இதில் நடித்தால் கண்டிப்பாக இவரின் மார்க்கெட் பல மடங்கு பெரிதாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

12:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா வைரஸால் மாஸ்டர் படம் எப்போது வரும் என தெரியாத நிலையில் உள்ளது. தற்போது இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடம் மாஸ்டர் தயாரிப்பாளர் மீதி பணத்தை கேட்டுள்ளார்.அதில் கோயமுத்தூர் விநியோகஸ்தர் இந்த நேரத்தில் பணத்தை எங்களால் திருப்பி தர முடியாது என கூறியுள்ளார்.

10:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக்காக ’குட்டி ஸ்டோரி’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டது. தற்போது இந்தப் பாடல் யூடியூபில் 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை சோனி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

09:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு RRR திரைப்படத்தில் இருந்து சிறப்பு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் திரைப்படம் 2021 ஜனவரி 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

08:25:02 on 27 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை நாஜிப் படை நிகழ்த்திய பெரும் இன அழிப்பிலிருந்து காப்பாற்றிய ஜெர்மானிய தொழிலதிபர் ஆஸ்கர் ஷிண்ட்லரின் கதையைச் சொன்ன படம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய, மனிதாபிமானத்தின் மகத்துவத்தைச் சொன்ன இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

05:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க விகடன்

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான கீரவாணி என்கிற மரகதவாணி தனது ட்விட்டர் பதிவில், இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பாடினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

05:27:01 on 27 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளனர். இந்நிலையில், பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

04:57:01 on 27 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனா அச்சம் தொடர்பாக நடிகர் வடிவேலு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் மிகவும் எமோஷ்னல் ஆகி கண் கலங்கி அழுதார். மேலும், நம்ம சந்ததிகளுக்காக நம்ம வம்சாவழிக்காக வீட்டிற்குள்ளேயே இருங்கய்யா...என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது.

02:25:01 on 27 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன். இவர் நடிகர் மட்டுமின்றி மருத்துவரும் கூட. இந்நிலையில், இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

08:57:30 on 27 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிவா-அஜித் கூட்டணியில் இதுவரை 4 படங்கள் வெளிவந்துள்ளது. இதில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட் தான். அதிலும் கடைசியாக வந்த விஸ்வாசம் எல்லாம் மெகா ஹிட் அடித்தது. இந்நிலையில் அஜித் சிவா மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றது இணையத்தில்.

10:57:01 on 26 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இதில், ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

06:57:01 on 26 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக, உடற்பயிற்சிக் கூடங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டு, தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றுவதில் தீவிரம் காட்டி வந்தவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் நடிகர் அருண் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

01:57:01 on 26 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு பிடித்த பாடல் குட்டி ஸ்டோரி பாடல் தான். இப்பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ். இந்நிலையில் அருண் ராஜா தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றால் அனைவரும் வீடுகளில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிலை எழுந்துள்ளதை வலியுறுத்தும் விதமாக தற்போது அவர் பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.

01:27:01 on 26 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

”ஊரடங்கையொட்டி சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்கு சோர்வு ஏற்படுகிறது, நமது சந்தோஷத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளுக்கும் இந்த உணர்வுதானே இருக்கும். தயவுசெய்து மிருகங்களை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள். மன அழுத்தத்தாலும், கவலையாலும் அவை இறக்கின்றன.” என நடிகை நமீதா கூறியுள்ளார்.

12:57:01 on 26 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து வெளிவந்த நடிகையர் திலகம் படம் இந்தியளவில் இவருக்கு மிக பெரிய உச்சத்தை தொட செய்தது. இந்நிலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

10:57:01 on 25 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்களுமே தொடர்ந்து ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது. இந்நிலையில், நான்காவது சீசனுக்கான நிகழ்ச்சி, ‘விஜய் டிவி அல்லாமல் வேறு ஒரு’தொலைக்காட்சி சானலில் ஒளிபரப்பாகப் போகிறது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை ‘விஜய் டிவி’ வட்டாரம் மறுத்துள்ளது.

08:57:01 on 25 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் உருவாகி வருகிறது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இந்தப்படத்தில் நடித்து வருகிறார்கள். அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

05:55:01 on 25 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தற்போது நாடு முழுவதும் பரவி கொண்டு, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் விஷயம் கொரானா வைரஸ். இது ஒரு புறம் இருக்க பிரபல நடிகை பூஜா தனது பிறந்தநாளை தனது கணவருடன் Maldives கடற்கரையில் கொண்டாடியுள்ளார்.

05:27:01 on 25 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

”நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்குமான சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டேன்” என்கிறார் பிரகாஷ் ராஜ்.

01:27:02 on 25 Mar

மேலும் வாசிக்க Asiavillenews

கடந்த 3 வாரங்களாக அணைத்து உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள விஷயம் கொரானா. இது குறித்து அந்தெந்த நாடுகளின் பிரதமர்கள் மக்களுக்கு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் இதனை குறித்து தளபதி விஜய் சென்ற மாதம் வெளிவந்த மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலிலேயே கூறியுள்ளார்.

10:57:02 on 24 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

வழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட ரிஸ்க்கான வேடங்களிலும், கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும் நடிக்க தயாராகி வருகிறாராம் காஜல் அகர்வால். மேலும் டாப் ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்ற கொள்கையையும் தளர்த்தி உள்ளார். அதன் காரணமாகவே சமீபகாலங்களில் இளம் நடிகர்களுடன் நடிக்க தொடங்கி உள்ளார்.

09:57:01 on 24 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகர் அஜித் குறித்து நடிகை ரேவதி ஒரு பேட்டியில் மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் “எனக்கு அஜித்தை முன்னரே தெரியும் பாசமலர்கள், திரைப்படத்தில் அவருடன் நடித்துள்ளேன்.மேலும், அவரை சிறு வயதிலிருந்தே பார்த்துவருகிறேன், அப்போதிலிருந்து தற்போது அவர் நடித்த விஸ்வாசம் வரையில், மிக அழகான வளர்ச்சி” என கூறியுள்ளார்.

02:27:01 on 24 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் தற்போது 800 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ‘யூடியூப்’பில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

10:57:01 on 23 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

சமீபத்தில் தான் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மறைந்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா பற்றிப் பேசுகையில் நடிகை அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அனுஷ்காவுக்கு அதிக புகழையும் அடையாளத்தையும் தேடித் தந்த திரைப்படம் ’அருந்ததி’. இதன் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. கடந்த வருடம் கோடி ராமகிருஷ்ணா காலமானார்.

09:57:01 on 23 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அசோக் செல்வன், ரித்திகா சிங், வானி போஜன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ஓ மை கடவுளே. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ.13.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

02:27:01 on 23 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

“மருத்துவமனையில் எனக்கு ஈக்கள் மொய்த்த இரண்டு வாழைப்பழத்தையும், ஒரு ஆரஞ்சு பழமும் மட்டுமே கொடுத்தனர். சில உணவுக்கள் எனக்கு அலர்ஜி தரக்கூடியவை. அதனால் அதனை நான் எடுத்துக்கொள்ளவில்லை. பசியாக இருந்த எனக்கு மருந்தும் கொடுக்கப்படவில்லை” என பாலிவுட் பாடகி கனிகா கபூர் குற்றம் சாட்டியுள்ளார்.

05:27:01 on 22 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாவதிலும் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், அண்மையில் வெளியான ஜிப்ஸி, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் ஆகிய படங்களும் திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

01:27:02 on 22 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ஆயுத பூஜை தினத்திலும் அஜித்தின் வலிமை தீபாவளி தினத்திலும் விக்ரமின் கோப்ரா கோடை விடுமுறையிலும் வெளியாகவிருந்தன. ஆனால், கிட்டத்தட்ட 2 வாரங்கள் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்படும் என்பதால் குறிப்பிட்ட தேதியில் இப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

11:57:01 on 22 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ”நிர்பயா வழக்கில் 4 விலங்குகள் தூக்கில் தொடங்விடப்பட்டன. ஒருவன் சட்டத்தின் ஓட்டை வழியே தப்பித்து விட்டான், அவன் பேருந்தில் மாட்டியோ அல்லது கொரோனா வைரஸ் தாக்கியோ சாகணும்” என பதிவிட்டுள்ளார்.

10:57:02 on 21 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ஜிப்ஸி. இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடாஷா சிங், நடிகர் தனுசுடன் டேட்டிங் செய்ய விரும்புவதாகவும், விஜய்யை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

09:57:01 on 21 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "வெளிநாட்டுப் படப்பிடிப்பைப் பத்திரமாக முடித்துத் திரும்பியுள்ள நிலையில், கோவிட்-19 பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு நானே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். நீங்கள் அனைவரும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

08:57:02 on 21 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2ஆம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் தலைப்பு ‘சோல்ஜர்’ என்று தகவல் வைரலாகி வருகிறது. #vijay65 என்ற ஹெஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். துப்பாக்கி 2 குறித்த அறிவிப்பு கொரோனா பாதிப்புகள் அடங்கியதும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08:27:02 on 21 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நடிகை லட்சுமி மேனன் சுந்தர பாண்டியன் கும்கி படங்களின் மூலம் நம் மனங்களை ஈர்த்தவர். அதே போல வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் ஸ்ரீ திவ்யா. இருவரும் இணைந்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்கிறார்.

04:27:01 on 21 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகை அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களை பாவ்னிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் பதிவிட்ட சிறிது நேரத்தில் அந்த புகைப்படங்களை நீக்கி உள்ளார்.

10:57:01 on 20 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

”எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கதாநாயகனின் அம்மாவாக நடிக்க மாட்டேன்'' என்பதில் நடிகை மீனா உறுதியாக இருக்கிறாராம். இப்போது அவர், சிவா-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் `அண்ணாத்த' படத்திலும், வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். பிடித்தமான வேடங்கள் வந்தால், தொடர்ந்து வெப் தொடரில் நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம்.

09:57:01 on 20 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனா வைரஸ் மற்றும் அதன் உலகளாவிய அச்சுறுத்தல் குறித்து 2011-ஆம் ஆண்டே கண்முன் கொண்டுவந்த படம் கண்டேஜியன் திரைப்படம். இயக்குனர் ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சீனாவில் மக்காவ் என்ற இடத்தில் வசிக்கும் சமையல்காரர் ஒருவரிடம் இருந்து உலகம் முழுவதும் ஒரு நோய் பரவுவதாக காட்சியமைக்கப்பட்டு இருக்கும்.

08:57:02 on 20 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

குரு சிஷ்யன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கவுதமி. இவருக்கு சந்தீப் பாட்டியா என்பவருடன் திருமணம் முடிந்தது. ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தற்போது கவுதமிக்கும் சந்தீப் பாட்டியாவுக்கும் பிறந்த மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது.

04:27:01 on 20 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

விஜய்யின் மாஸ்டர் படம் தற்போது ரீலிஸுக்கு தயாராகி விட்டது ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போகவும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் 3 கோடி ரூபாய் என சில தகவல்கள் கசிந்துள்ளன.

01:57:02 on 20 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

வலிமை படத்தின் கதாநாயகி ஹூமா குரேஷி புல்லட் ஓட்டுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. நடிகர் அஜித் சிறந்த பைக் ரேஸர் என்பதால், அவருக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு ஹூமா குரேஷியின் பைக் ஸ்டண்ட் காட்சிகள் படத்தில் இடம் பெறும் என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

08:57:01 on 20 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஒருமுறை ரஜினியிடம் பாட்ஷா படத்தை ரீமேக் செய்தால் யார் பாட்ஷாவாக நடித்தால் நன்றாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூப்பர் ஸ்டார் என்னைப்போல நடிக்க பலர் கிடைக்கலாம் ஆனால் ரகுவரனாக நிச்சயம் அந்த ஆண்டவனால் கூட நடிக்க முடியாது என்று கூறினாராம். ஆம், சினிமா உலகின் பாட்ஷா ரகுவரனின் நினைவு தினம் இன்று.

10:57:01 on 19 Mar

மேலும் வாசிக்க AsiaVille News

கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாகவும், அவர்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

09:57:02 on 19 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆங்கில செய்திதாள் ஒன்று 2019இல் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகளுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில், அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமலா பால், நயன்தாரா, மாளவிகா மோகனன், கீர்த்தி சுரேஷ், சமந்தா அக்கினேனி, அதுல்யா ரவி, யாஷிகா ஆனந்த் மற்றும் சமீரா பங்கேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

08:27:02 on 19 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

இந்தியன் முதல் பாகம் ஊழல் எதிர்ப்பை காத்திரமாக பேசியது. இரண்டாவது பாகமும் ஊழல் எதிர்ப்பை மையமாகக் கொண்டுதான் தயாராகி வருகிறது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை போன்றே வில்லன் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், கதை அமைப்பும் அவ்வாறுதான் இருப்பதாகவும் அரசு தரப்புக்கு தகவல் சென்றிருக்கிறது.

03:57:01 on 19 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் முருகதாஸ் தான் என்று கூறியுள்ளார். அதோடு முருகதாஸிற்கு சன் டிவி பிக்சர்ஸ் ஒரு சில கண்டிஷன் போட்டுள்ளார்களாம், முருகதாஸ் அந்த கண்டிஷனுக்கு இறங்கி வந்தாலோ, அல்லது சன் பிக்சர்ஸ் விட்டுக்கொடுத்தாலோ இந்த படம் 99% கூட்டணி உறுதியாகிவிடுமாம்.

02:27:01 on 19 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகை அனுஷ்கா, “2008 -ம் ஆண்டு நான் ஒருவரைக் காதலித்தேன். நாங்கள் இருவரும் இப்போது காதலர்களாக இருந்திருந்தால் அவருடைய அடையாளத்தை தெரிவித்திருப்பேன். வேறு வழியில்லாமல் பிரிந்தோம். என்னைப் பொறுத்தவரை அது மரியாதைக்குரிய உறவு.” என கூறியுள்ளார்.

09:57:01 on 18 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நமீதா வெளியிட்டுள்ள பதிவில், "இவன் பெயர் தமிழ் செந்தமிழ் என்ற பக்கத்திலிருந்து ஆபாச தகவல் அனுப்பப்படுவதாகவும், இது குறித்து கேட்டதற்கு, தமது ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என்று அவர் மிரட்டுவதாகவும் நடிகை நமீதா கூறியுள்ளார்.

06:55:01 on 18 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நடிகை மதுபாலா தனது திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார். மதுபாலாவுக்கு அமெயா, கையா என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி வருகின்றது.

01:27:01 on 18 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடிக்கிறார் என்று அவருக்கு பெயர் கிடைத்தாலும் அம்மா வேடத்தில் நடிப்பதால் அவரை ஜோடியாக நடிக்க ஹீரோக்கள் யாரும் அழைப்பதில்லையாம். இதனால் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். இதுபற்றி ஐஸ்வர்யா கூறும்போது, 'இனி அம்மா வேடத்தில் நடிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்' என தெரிவித்தார்.

09:57:02 on 17 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

நடிகர் விஜய் கடந்த சில படங்களில் விக் வைத்தே நடித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து விஜய்யின் நண்பரான ஸ்ரீமனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஸ்ரீமன், ‘இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவர் எது செய்தாலும் அது விழாவுக்காகத்தான். இது போன்ற கேள்விகள் தேவையில்லாதது.” என பதிலளித்துள்ளார்.

05:57:01 on 17 Mar

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

கொரோனா அச்சத்தின் காரணமாக மாநாடு படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதை விமர்சித்து நெட்டிசன் ஒருவர் நகைச்சுவையான மீம் ஒன்றை பதிவிட்டிருந்தார். மாநாடு ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சிம்பு மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடுவது போலவும், தயாரிப்பாளர் வருத்தத்தில் அமர்ந்திருப்பது போன்றும் அந்த மீம் உருவாக்கப்பட்டிருந்தது.

02:27:01 on 17 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பிரபல காமெடி நடிகரான தம்பி ராமைய்யாவின் மகனான உமாபதி ராமையாவுடன் நடிகை யாஷிகா ஒன்றாக சுற்றி திரியும் புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உமாபதி ராமையா அதாகப்பட்டது மகாஜனங்களே, திருமணம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

12:57:01 on 17 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகள் மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை நிறுத்தப்படப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடந்த ஃபெப்சி கூட்டத்தில் கரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் 75 தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

07:55:01 on 17 Mar

மேலும் வாசிக்க தினமணி

மேலும் வாசிக்க