View in the JustOut app
X

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் எடை குறைவதை காணலாம்.

05:57:02 on 30 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் ஹோமியோபதி மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருவருடைய அனைத்து நோய் அறிகுறிகளையும், உடல் மற்றும் மனம் தொடர்பான அனைத்து அறிகுறிகளையும் அலசி ஆராய்ந்து சரியான அளவில் மருந்துகள் கொடுத்து நோயை குணப்படுத்துவது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பம்சமாகும்.

06:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

முப்பது வயதை தாண்டும் போது ஆண்களுக்கு எலும்புகளின் வலிமை குறைய ஆரம்பிக்கும். அதிலும் முக்கியமாக உட்கார்ந்தே வேலை செய்யும் ஆண்கள். எனவே, தினமும் நடைபயிற்சி, மற்றும் போதிய அளவு உடலுக்கு வேலைகள் தர வேண்டியது அவசியம்.

07:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

05:57:01 on 27 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

குழந்தை பருவத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களான குறைந்த அளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதிகம் முக்கியத்துவமளிப்பது, தேவையான அளவு நேரம் தூங்குவது, நிறைய பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது ஆகியவை ஆரோக்கியமாக வாழ தேவை என ஆய்வு தெரிவிக்கிறது.

04:27:01 on 26 Jun

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

திருமணம் ஆன புதிதில், முந்தைய காதல் பற்றி பேசி சந்தோஷமாக சிரித்து கொள்வார்கள். ஆனால், காலப்போக்கில் சண்டை ஏற்படும்போது திருமணதிற்கு முந்தைய உறவினை சொல்லிக்காட்டும்போது, இவ்வளவு நாள் சந்தேகத்துடன் தான் என்னுடன் குடும்பம் நடத்தி கொண்டிருக்கிறாயா என்ற கேள்வி அங்கு எழுந்து உறவில் மிக பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்.

07:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர, ரத்தம் விருத்தியாகும்.

05:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

வரகரிசியில் புரத சத்து அதிகம் உள்ளது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும்.

06:57:01 on 25 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும். காலையில் எழுந்தவுடன் டீ, காப்பிக்கு பதில் 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் வயிறு சுத்தமாவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றமும் நீங்கும்.

07:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை உள்ளிழுக்கும் இதனால் உடலானது சோர்வாகாமல் அதிக புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

05:57:01 on 24 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை வைட்டமின் “ஏ” சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. பலாப்பழம் சாப்பிடுவதால் கண்பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். பலாப்பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும்.

05:57:01 on 23 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோலை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

10:57:01 on 22 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சௌசௌவை பொரியல் செய்தோ, குழம்பில் சேர்த்தோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சூப் செய்தோ சாப்பிட்டு வர பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வருபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.

05:57:02 on 22 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்து பருத்தி துணியில் நனைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி விடுங்கள். இது சருமத்தை இறுக்கமாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் பொலிவான சருமம் கிடைக்கும்.

07:57:01 on 21 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அகத்திக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறி சிரங்கு, தொண்டைப்புண், தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரை மிகசிறந்த மருந்தாகும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.

05:57:02 on 21 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஆயில் புல்லிங் என்பது, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10 முதல் 15 நிமிடம் கொப்பளிப்பது. ஆயில் புல்லிங் செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன.

10:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

எலுமிச்சை ஜூஸ் உடலுக்கு நல்லது. நிறைய ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இருப்பினும் மூட்டு வலி கொண்டவர்களோ அல்லது அதிகமாக எலுமிச்சை எடுத்துக்கொண்டாலோ எலும்புகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்படவில்லை.

01:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அனைவரும் அதிகாலை எழுந்து யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த முடியாது. ஆனால் உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது. உணவு உட்கொள்வதற்கு யோகா பயிற்சிக்கும் குறைந்தது 2 மணிநேர இடைவேளை அவசியம்.

01:27:01 on 20 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தால், என்ன தான் மற்ற நேரங்களில் வயிறு நிறைய உணவை உண்டாலும், அவை உடலுக்கு ஆற்றலைத் தருவதற்கு பதிலாக, கொழுப்பை அதிகரித்து, உடலில் உள்ள களைப்பை நீக்காமல் இருக்கும். காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது.

08:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

அதிக பித்தநீரால் தோன்றும் மயக்கம், வாய்க்கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

07:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

தினமும் இரண்டு சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படாது. சப்போட்டாவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

06:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

அப்பாவை ரோல் மாடலாக நினைக்கும் மகன்கள் தன்னுடைய தோல்வியை எப்படி பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உங்களிடமிருந்து நன்கு கற்றுக்கொண்டிருப்பார்கள். எனவே அவர்களின் வெற்றியை மட்டும் எதிர்பார்க்காதீர்கள். தோல்விகள் எதார்த்தம் அதை எதிர்கொள்ள மகனுக்கு உறுதுணையாக இருங்கள் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

05:57:01 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மேலும் வாசிக்க