View in the JustOut app
X

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 2 நாள் நிகழ்வாக,
14-வது மாவட்ட மாநாடு நேற்று பேரணியுடன் தொடங்கியது. இதில் கலந்து
கொள்வதற்க்காக, மாநிலச் செயலாளர் முத்தரசன் வந்திருந்தார்.
அப்போது அவர், பிரதமரை அழைத்து வருவதன்மூலம், தமிழக முதல்வர்
பழனிச்சாமி பிரதமரை காக்கா பிடித்துக் கொள்கிறார் என்று அவர்
தெரிவித்தார்.

short by பா.செ.மீனா / 04:55:01 on 26 Feb

Read more at விகடன்

கடந்த வருடம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்
பிறந்தநாள் அன்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆரம்பித்த
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பேரவை துவங்கிய ஓராண்டு முடிந்த
நிலையில் விரைவில் புதிய கட்சி துவங்க உள்ளதாக திருச்சியில்
அறிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 04:25:01 on 26 Feb

Read more at விகடன்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கோவிலில் துணை முதலமைச்சர்
பன்னீர்செல்வத்தின் பேரனுக்கு காது குத்தும் விழா நடைபெற்றது.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜியிடம், அதிமுக
சட்டமன்ற உறுப்பினர் தினகரன் அணியில் சேர்ந்தது பற்றிச்
செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுக ஆட்சி பலமாக இருப்பதாக அவர்
தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 12:25:02 on 26 Feb

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவர்
குறித்து ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்,
இந்தப் புத்தகம் பிப்.27ம் தேதி வெளிவருகிறது. இந்த நூலின்
உள்ளடக்கங்கள் ஸ்நேகிதி பத்திரிகையில் 2011 முதல் 2015 வரை ‘தளபதியும்
நானும்’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தது .

short by பா.செ.மீனா / 11:55:01 on 25 Feb

இருளில் 70 ஆண்டுகள் செலவிட்ட பிறகு, எலிபண்டா தீவுகளில் உள்ள
மூன்று கிராமங்கள் இறுதியாக மின்சார இணைப்புகளை பெற்றுள்ளதாக
பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனை சாத்தியமாக்கிய
நிர்வாகத்தினருக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்வதாக 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 10:55:01 on 25 Feb

சென்னையில் ஜெயலலிதா அவர்களுடைய சிலையை திறந்திருக்கிறார்கள்.
அதற்கு கீழே இவர் தான் ஜெயலலிதா என போர்டு வைக்க வேண்டும். அப்போது
தான் அது ஜெயலலிதா என தெரியவரும். தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர்
காவிரி விவகாரம் சம்பந்தமாக ஏதும் பேசவில்லை என்று தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 09:55:01 on 25 Feb

Read more at விகடன்

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிற்கு தாமதமாக சென்ற தமிழிசைக்கு,
போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அனுமதி மறுப்பட்ட சம்பவம்
குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, வரும் வழியில்
தொண்டர்கள் பலர் குவிந்திருந்ததால், அவர்களை சந்தித்து விட்டு
வந்ததாக தெரிவித்தார்.

short by ரா. சரண்யா / 08:55:01 on 25 Feb

புதுச்சேரி ஆட்சியாளர்கள் மக்களுக்கு அநியாயம் இழைத்து விட்டதாக
பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். நேரு குடும்பத்தின் ரிமோட்
கன்ட்ரோல் ஆட்சி புதுச்சேரியில் நடைபெறுவதாகவும் அனைத்து
துறைகளிலும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து
விட்டதவும் மோடி சாடியுள்ளார்.

short by ரா. சரண்யா / 07:55:01 on 25 Feb

ஜெயலலிதாவின் பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை,
மானியங்களே ஒழிக்கப்பட வேண்டும் என கூறும் மோடியை அழைத்து
கொடுத்தது ஏன் என கேள்வி டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி
வருவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பை
சந்தித்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.

short by ரா. சரண்யா / 06:25:01 on 25 Feb

புதுச்சேரி ஆரோவில் பொன்விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர்
மோடி வெளியிட்டார். இதனையடுத்து உரை நிகழ்த்திய மோடி ஆரோவில்
பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
என்றும் கடந்த 50 ஆண்டுகளாக ஆரோவில் சிறந்த சமூக, கலாச்சார, ஆன்மிக
பணிகளை ஆற்றி வருகிறது எனவும் கூறியுள்ளார்

short by ரா. சரண்யா / 05:25:01 on 25 Feb

ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து விட்டு நம்மை துரோகி என்கிறார்.
துரோகத்தின் ஒரு பக்கம் ஓபிஎஸ் என்றால் மறுபக்கம் ஈபிஎஸ்.
வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் போன்று, பாகுபலி
சினிமா கட்டப்பா போல, எம்.ஜி.ஆர். சினிமாவில் வரும் பி.எஸ். வீரப்பா,
நம்பியார்போல அவர்கள் இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன்
கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 04:55:02 on 25 Feb

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் 50-வது ஆண்டு பொன்விழா இன்று
கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி
இன்று காலை புதுவை வந்தடைந்தார். அங்கிருந்து, கார் மூலம்
அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு
அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதிகளுக்கு மலர் தூவி அஞ்சலி
செலுத்தினார்.

short by ரா. சரண்யா / 04:25:02 on 25 Feb

சென்னை செல்வதற்கு ஓ.பி.எஸ்., மதுரை விமான நிலையம் வந்தார். அதே
நேரத்தில் தினகரனும் வந்தார். இதனால் இரு தரப்பினரின் ஆதரவாளர்கள்
குவிந்திருந்தனர். ஓ.பி.எஸ்.,க்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் கோஷம்
எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாக்குவாதம்
நடந்தது. போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைத்தனர்.

short by ரா. சரண்யா / 03:55:01 on 25 Feb

பெண் சக்திக்கு எந்த வரம்புகளும் இல்லை. பெரும் விஞ்ஞானிகளின்
மரபு இந்தியாவில் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் செயற்கை
நுண்ணறிவு ஏழை மற்றும் நலிவடைந்தவர்களின் நலன்களை
உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர்
மோடி ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

short by ரா. சரண்யா / 03:25:01 on 25 Feb

நீரவ் மோடிக்கு 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கோடி கடன் தரப்பட்டது
எப்படி என்பதை மோடி விளக்க வேண்டும் என்று ராகுல்காந்தி
வலியுறுத்தியுள்ளார்.பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடுகளில்
ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி
அறிவித்துள்ள போதும் பணம் கைமாறியது எப்படி என்று விளக்கம்
அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

short by ரா. சரண்யா / 02:25:01 on 25 Feb

ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி ஜெயலலிதாவின் சிலை என்று கூறி
யாரோ ஒருவருடைய சிலையை திறந்து வைத்திருக்கிறார்கள். அந்த சிலை
எடப்பாடியின் அம்மாவா? ஓ.பன்னீர்செல்வத்தின் அம்மாவா? என்று சமூக
ஊடகங்களில் அந்த சிலையை பற்றி வந்த கருத்துகளால் நகைப்புதான்
வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 01:25:01 on 25 Feb

அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை
மறுசீரமைப்பு செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர்
ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளான நேற்று
அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை ஜெயலலிதா போன்று
இல்லை என பலர் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

short by ஆ.சங்கர் / 01:12:03 on 25 Feb

திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில்,
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள்
பொதுக்கூட்டத்தில் ஜெ.தீபா கலந்து கொண்டார். அதில் பேசிய அவர்,
அ.தி.மு.கவின் அங்கமாகச் செயல்பட்டு வந்த இந்தப் பேரவை விரைவில்
மக்களுக்கான இயக்கமாக,கட்சியாக மாற்றப்படும் என்று கூறினார்.

short by ரா. சரண்யா / 11:55:01 on 25 Feb

Read more at விகடன்

சோனியா காந்தியின் ரேபரேலி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து சோனியாவின் பிரதிநிதி கே.எல்.ஷர்மா கூறுகையில்,
“தவிர்க்க முடியாத காரணங்களால் சோனியாவின் ரேபரேலி பயணம் ரத்து
செய்யப்பட்டது. இது குறித்து ரேபரேலி மாவட்ட காங்கிரசாருக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றார்.

short by ரா. சரண்யா / 11:25:01 on 25 Feb

கரை வேட்டி கட்ட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்
கமல்ஹாசன் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவல்துறை அனுமதியின்றி பேனர் வைத்தல், விளம்பரம் செய்தல் கூடாது
எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருச்சி பொதுக்கூட்டம்
பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாக
தகவல் வெளியாகியுள்ளது.

short by ரா. சரண்யா / 09:25:01 on 25 Feb

மானிய ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கி வைக்க வருகை தந்ததற்கும்,
தமிழ் மொழியை பாராட்டி பேசியதற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி.
காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்காற்று குழுவை விரைவில் அமைக்க உரிய
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டு மக்களின் சார்பில்
கோரிக்கை வைக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

short by ரா. சரண்யா / 09:10:01 on 25 Feb

ஏப்ரல் மாதம் திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும்
கமல்ஹாசன் அதற்கு முன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக
போராடி வரும் நெடுவாசல் மக்களை சந்தித்து பேச உள்ளார். மக்கள் நீதி
மய்யம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, மற்றும்
நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை
நடத்தினார்.

short by ரா. சரண்யா / 08:25:02 on 25 Feb

சென்னை வண்டலூரில் நடந்த விழா ஒன்றில் பேசிய கவர்னர் பன்வாரிலால்
புரோஹித், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. போலீசார்
தங்களுக்கு என பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளாமல் சட்டம்
ஒழுங்கில் கவனம் செலுத்துகின்றனர். தமிழகத்தில் தான் முதன்
முதலில் மகளிர் போலீஸ் ஸ்டேசன்கள் அமைக்கப்பட்டன என்றார்.

short by ரா. சரண்யா / 08:10:01 on 25 Feb

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவர் கமலை அக்கட்சியின்,
உயர்மட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மரியாதை
நிமித்தமாக சந்தித்து பேசினார். இதனையடுத்து, தென்னிந்திய நடிகர்
சங்க தலைவர் நாசர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலை சந்தித்து
பேசினார். அப்போது அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து
தெரிவித்தார்.

short by ரா. சரண்யா / 07:55:01 on 25 Feb

ஜெயலலிதா சிலையின் தோற்றம் குறித்து விமர்சனம் செய்பவர்கள்
மிருகசிந்தனை கொண்டவர்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கமல் சுயசிந்தனை இல்லாதவர் என்றும், கட்சியின் கொடியை கூட தேர்வு
செய்ய முடியாமல் வேறு ஒரு நிறுவனத்திடம் இருந்து காப்பி
அடித்தவர்கள் கொள்கையை எப்படி கடைப்பிடிப்பார்கள் என்றும்
கேள்வி எழுப்பினார்.

short by ரா. சரண்யா / 07:40:02 on 25 Feb

வங்கி மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
விழிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று சம்மந்தப்பட்ட
அதிகாரிகளை கேட்டுக் கொள்வதாக அருண் ஜெட்லி
தெரிவித்திருக்கிறார். வங்கி மோசடி பொருளாதார சீர்திருத்தம்
மற்றும் எளிதாக தொழில் துவங்குவதற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது
என்றும் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 07:25:01 on 25 Feb

மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில்
நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி
அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம்.தமிழக மக்களுக்கும், தமிழ்
மொழிக்கும் தலை வணங்குகிறேன். மகா கவி பாரதி பிறந்த மண்ணில்
நிற்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

short by ரா. சரண்யா / 07:10:01 on 25 Feb

மக்கள் நீதி மைய்யம் என் ற பெயரில் புதிய கட்சி யை துவக்கிய கமல்
தொடர்ந்து வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களிடம் கருத்துக்களை கூறி
வருகிறார். இதில், தமிழகத்தில் வேடிக்கை மனிதர்களை விட வேடிக்கை
பார்க்கும் மனிதர்களே அதிகம் பார்த்தது போதும், பொங்கி எழுவோம் என
தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கமல் கூறி உள்ளார்.

short by பா.செ.மீனா / 02:55:01 on 25 Feb

செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் ,
ஜெயலலிதாவின் சிலை என கூறி, வளர்மதியின் சிலையை வைத்திருப்பதாக
கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர்
ஜெயக்குமார், “ஜெயலலிதாவின் சிலை வடிவத்தை வேறு நபர்களோடு
ஒப்பிடுவது தவறு, மனசாட்சி இல்லாத மிருகங்களே இப்படி பேசும் என்று
கோபத்தோடு தெரிவித்தார்.

short by பா.செ.மீனா / 02:40:01 on 25 Feb

பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த தினம். இதே நாளில் பிறந்த தன் இரட்டைக்
குழந்தைகளை சசிகலாவின் உறவினரும் இளவரசியின் மகளுமான
கிருஷ்ணப்ரியா தனது ஃபேஸ்புக்கில், மறக்க இயலாத பல நினைவுகளை
தன்னுளடங்கிய தினம், இத்தினம் என பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்தப் படங்களை பார்த்த முகநூல்வாசிகள் அதனை பரபரப்பாக்கி
வருகிறார்கள்.

short by பா.செ.மீனா / 01:55:01 on 25 Feb

ரஜினி, கமல் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசியல் வானில்
அரிதாரம் பூசிய பலூன்கள் நீண்ட நாட்கள் பறக்காது என்றும், அரசியல்
அவதாரம் எடுத்தவர்களின் வசனம் விரைவில் புஸ்வாணமாகும். அரசியலில்
பறக்கும் வண்ண பலூன்கள் வெடித்துச் சிதறுதை பார்க்கத்தான்
போகிறோம் என்றும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 10:10:01 on 24 Feb

வங்கி முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க
நேரிடும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டை நிர்வாகம் நீண்ட காலம்
கண்டுபிடிக்கத் தவறியதும், எந்த ஊழியரும் எச்சரிக்காமல்
இருந்ததும் கவலைக்குரியது என்று அவர் கூறினார்.

short by ரா. சரண்யா / 08:56:01 on 24 Feb

காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்த அனைத்துக் கட்சியினர்
டெல்லி பயணம் செய்ய உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி
பிரதிநிதிகள் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளனர். தமிழக அரசு
சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம்
கேட்கப்பட்டுள்ளது.

short by ரா. சரண்யா / 07:56:01 on 24 Feb

பாஜக தலைவர் தமிழிசைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக
மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக
தலைமை அலுவலகத்துக்கு வந்த கடிதத்தில் எங்கள் கட்சியின் தலைவரை
தாக்கிப் பேசியுள்ளீர்கள். எங்கள் மாவட்டத்துக்கு வரக்கூடாது.
மீறி வந்தால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று
குறிப்பிடப்பட்டிருந்தது.

short by ஆ.சங்கர் / 07:25:02 on 24 Feb

தமிழகத்தின் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன்
பேசி கொண்டிருக்கிறார்கள். தினகரனுக்கு அவர்களின் முழுமையான
ஆதரவு உள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தற்போது சந்தித்து
ஆதரவு தெரிவித்துள்ளார். இன்னும் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள்
டி.டி.வி.யை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்று செந்தில்
பாலாஜி கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 07:10:02 on 24 Feb

ஜெயலலிதா சிலையை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, பல சோதனைகளை
கடந்து ஆட்சி தொடர்கிறது. ஆட்சியை உடைக்க வேண்டும். கவிழ்க்க
வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அவர்களால் அது முடியவில்லை.
அவர்கள் கனவெல்லாம் பகல் கனவாக உள்ளது. அம்மா ஆசி இருக்கும் வரை
ஆட்சியை தொட்டு கூட பார்க்க முடியாது என்று கூறினார்.

short by ரா. சரண்யா / 06:10:02 on 24 Feb

எனது மற்றும் எனது மகன் இல்லங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை
தொடர்ந்து சோதனை செய்வது அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்று
உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு அளித்துள்ளார்.
தன்மானத்துடன் வாழ்வது அடிப்படை உரிமை எனக் கூறி ப.சிதம்பரம் மனு
அளித்துள்ளார்.

short by ரா. சரண்யா / 05:40:01 on 24 Feb

சில தினங்களுக்கு முன்பு கட்சித் தொடங்கினார் நடிகர் கமல்.
ராமேஸ்வரத்தில் தொடங்கி மதுரையில் நடந்த கூட்டம் வரை நான்கு மணி
நேரத்துக்கும் மேலாகத் தொலைக்காட்சியில் லைவ் செய்கிறார்கள்.
மக்களே நடிகர்களை விட்டு வெளியே வாருங்கள். தமிழகத்தில் மாற்றத்தை
ஏற்படுத்துங்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 05:10:02 on 24 Feb

Read more at விகடன்

4-வது குளோபல் வர்த்தக மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பஞ்சாப்
நேஷனல் வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். நிதி முறைகேடுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து
கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்களின் பணத்தை
கொள்ளையடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 04:26:02 on 24 Feb

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகிறார். இரவில்
கவர்னர் மாளிகையில் தங்கி இருக்கும் மோடி முக்கிய பிரமுகர்கள்
சிலரை சந்திக்க உள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுள்ளார். இரவு 8 மணியில்
இருந்து 9 மணிக்குள் இந்த சந்திப்பு நடைபெறும் என்று
கூறப்படுகிறது.

short by ரா. சரண்யா / 03:55:01 on 24 Feb

ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் வெண்கலச்
சிலையை முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் பன்னீரும் திறந்து
வைத்தனர். இந்தச் சிலை ஹைதராபாத்தில் செய்து கொண்டுவரப்பட்டது.
ஜெயலலிதாவின் முழுஉருவ வெண்கலச் சிலையை வடிவமைத்த பிரசாத்
என்பவருக்கு முதல்வர் பழனிசாமி தங்க மோதிரம் அணிந்து
கெளரவித்தார்.

short by ரா. சரண்யா / 02:40:01 on 24 Feb

Read more at சமயம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறந்த பின்
முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்
அதிமுகவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்டிக் காத்தார் என்றும்
அதிமுக ஒரு கட்டுப்பாடான இயக்கம் என்பதை நிரூபித்துக் காட்டியவர்
ஜெயலலிதா என்றும் அவர் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 02:26:01 on 24 Feb

ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,அரிதாரம்
பூசிய சிலர் மக்களை காக்க வந்த ரட்சகர்கள் போல வீரவசனம்
பேசுகின்றனர்.மக்களை காப்பாற்ற போவது நாங்கள் தான் என்பவர்களின்
பேச்சு விரைவில் புஸ்வாணமாகும்.அவை வெடித்து சிதறுவதை நம்
கண்முன்னே பார்க்கத்தான் போகிறோம் என்று கமல் மற்றும் ரஜினியை
மறைமுகமாக தாக்கியுள்ளார்.

short by ரா. சரண்யா / 02:10:01 on 24 Feb

காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டுகள் இருந்த சோனியா காந்தி சமீபத்தில்
அந்த பொறுப்பிலிருந்து விலகினார். அவரது மகன் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின் முதன் முறையாக
ரேபரேலி செல்லும் சோனியா கட்சியின் நலத்திட்ட பணிகளை துவக்கி
வைக்க உள்ளார். கட்சியின் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த
உள்ளார்.

short by ரா. சரண்யா / 01:26:01 on 24 Feb

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை
முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள சிறைக் கைதிகளில் 1,500 பேரை
விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 340 பேர்
பாளையங்கோட்டையில் 300 பேர் உட்பட 1,500 கைதிகள் விடுதலை
செய்யப்படுகின்றனர்.

short by ரா. சரண்யா / 12:55:01 on 24 Feb

Read more at சமயம்

திமுகவை குறை சொல்லி டெல்லி முதல்வர் பேசியிருக்கிறார்.
பாரளுமன்றத்தில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென
போராட்டம் நடத்தி தான் கெஜ்ரிவால் பிரபலமானார். இதன் மூலம் தான்
டெல்லி முதல்வராக வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு இன்று வரை
அச்சட்டத்தை நிறைவேற்ற அவர் குரல் கொடுக்காதது ஏன் என்று
மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

short by ரா. சரண்யா / 12:40:02 on 24 Feb

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு டிடிவி தினகரன்
வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களும் தொண்டர்களும் யார் பக்கம்
இருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் ஆர்.கே.நகர்
வெற்றி. ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளில் அவர் நிறுவிக்காட்டிய
மக்கள் அரசை அமைக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.

short by ரா. சரண்யா / 12:25:01 on 24 Feb

ஒடிசா, ம.பி., மாநிலங்களில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு
இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு
தொடங்கியது. காங்., எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளதையடுத்து
மத்தியப்பிரதேச மாநிலம் மங்காலி, கொலாரஸ் ஆகிய 2 சட்டசபை
தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலம் பீஜப்பூர் சட்டசபை தொகுதிக்கும்
இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

short by ரா. சரண்யா / 12:10:02 on 24 Feb

அதிமுக கட்சியின் “நமது புரட்சித் தலைவி அம்மா” என்ற
அதிகாரப்பூர்வ நாளிதழ் இன்று வெளியிடப்பட்டது. இதனை துணை முதல்வர்
ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் ஈ.பி.எஸ் ஆகியோர் வெளியிட்டனர். இந்த
நாளிதழில் டெல்லி பயனத்துக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மும்முரமாக
செய்து வருகிறது என்ற செய்தி வந்துள்ளது.

short by ரா. சரண்யா / 11:55:01 on 24 Feb

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர்
சிலைக்கு அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை இன்று
திறக்கப்பட்டது. இச்சிலை 7 அடி உயரம் கொண்ட வெண்கலச் சிலை ஆகும்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்
ஈ.பி.எஸ் ஆகியோர் இச்சிலையை திறந்து வைத்தனர்.

short by ரா. சரண்யா / 11:25:54 on 24 Feb

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா இடங்கள் வரும் ஏப்ரல்- மே
மாதங்களில் காலியாகின்றன. காலியாக உள்ள இடங்களுக்கு வரும் மார்ச்
23-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய
கடைசி தேதி மார்ச் 12-ம் தேதி ஆகும் என்று தலைமை தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது.

short by ரா. சரண்யா / 10:55:02 on 24 Feb

முதலீட்டார்கள் மாநாடு என்ற பெயரில் கோடிக்கணக்கான பொதுப் பணத்தை
வீணடிப்பது பாஜகவின் பாணியாகிவிட்டது என்று உபி அரசின்
செயல்பாடுகள் குறித்து மாயாவதி குற்றம்சாட்டினார்.பாஜக முன்னர்
கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.அதன்பிறகே
எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனைகளை செய்ததாகக்
கூறிக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

short by புனிதா / 09:55:01 on 24 Feb

காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க
நடவடிக்கை தேவை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன்
தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் தமிழகம் வருவதற்கு முன் காவிரி
மேலாண்மை வாரியம் அறிவிப்பை வெளியிடவேண்டும் என்றும் அவர்
கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 09:25:02 on 24 Feb

நாகலாந்து சட்டசபை தேர்தலையொட்டி திமாப்பூர் பகுதியில் நேற்று
நடைபெறவிருந்த அமித் ஷாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ரத்து
செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் அவரது
பிரசார சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின்
நாகலாந்து மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விஸோ
தெரிவித்துள்ளார்.

short by ரா. சரண்யா / 09:10:01 on 24 Feb

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்
அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை முதல்வர்
பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இன்று திறந்து
வைக்க உள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிலை திறப்பு
விழா நடைபெறுகிறது.

short by ரா. சரண்யா / 08:55:02 on 24 Feb

டெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு முறை பயணமாக இந்தியாவில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் பல இடங்களை அவர்
பார்வையிட்டார். இந்நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார்.

short by புனிதா / 08:10:01 on 24 Feb

சென்னைக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசின்,
'அம்மா ஸ்கூட்டர்' திட்டத்தை துவக்கி வைப்பதுடன், முக்கிய
பிரமுகர்களையும் சந்தித்து பேச உள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளை
முன்னிட்டு, இத்திட்டம் துவங்கப்படுகிறது. விழாவில், முதல்வர்,
பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்
பங்கேற்கின்றனர்.

short by ரா. சரண்யா / 07:55:01 on 24 Feb

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலைகளுடன், தங்கள்
உற்பத்திக்கான நியாயவிலை, கடன் தள்ளுபடி ஆகிய பிரச்சினைகளினால்
சமீபத்தில் விவசாயிகள் போராடிய வேளையில், எம்.எல்.ஏ.க்கள்
கூடத்தான் சாகிறார்கள். மரணத்தை யாரேனும் கட்டுப்படுத்த முடியுமா?
எம்.எல்.ஏ.க்கள் என்ன சாகாவரம் பெற்றவர்களா?” என்று அமைச்சர்
பார்கவா கேட்டார்.

short by புனிதா / 07:40:01 on 24 Feb

பிரதமர் மோடி சென்னை வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்
தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக
இன்று சென்னை வருகிறார். இதனையடுத்து தமிழ்நாடு சிறப்பு காவல்
படையினர் ஆயிரம் பேர் உட்பட 20 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில்
ஈடுபட உள்ளனர்.

short by ரா. சரண்யா / 06:55:01 on 24 Feb

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம்
ரத்து செய்தது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உத்தரவிட்டுள்ள நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு
மீண்டும் நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில்
நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்தார்.

short by புனிதா / 06:40:01 on 24 Feb

திருவண்ணாமலையில் அனுமதியின்றி எம்.ஜி.ஆர் மற்றும் தமிழக முன்னாள்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறப்பால் சர்ச்சை
ஏற்பட்டுள்ளது.ஏழு மாதம் முன்பு நிறுவப்பட்ட சிலைகளை
அ.தி.மு.க-வினர் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

short by புனிதா / 05:25:01 on 24 Feb

பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
கமல் பிரிக்கும் ஓட்டுகளால் திமுகவிற்கு தான் பாதிப்பு ஏற்படும்
என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், காவிரி குறித்து நேற்று
நடந்த அனைத்து கட்சி கூட்டத்தால், எந்த பயனும் இல்லை என
தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 05:10:01 on 24 Feb

தடுப்பூசி போட்டது பற்றிய சான்றிதழ் இருந்தால்தான் பள்ளிகளில்
குழந்தைகளை அனுமதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர்
விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் போலியோ, அம்மை, காசநோய்
உள்ளிடவற்றை தடுக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும் அவர்
கூறியுள்ளார்.

short by புனிதா / 04:25:01 on 24 Feb

அசாம் மாநிலத்தில் முஸ்லீம் மக்கள்தொகை அதிகரித்து வருவதாகவும்,
பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
பாஜகவை விட வேகமாக வளர்ந்து வருவதாகவும் ராணுவ தளபதி பிபினுக்கு
பதிலளித்துள்ள அமைச்சர் நிர்மலா சீதாராமன்,யாரோ சிலர்
எதுகுறித்தோ பேசியதற்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும் என
சீற்றத்துடன் பதிலளித்தார்.

short by புனிதா / 03:25:01 on 24 Feb

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு குடும்பத்துடன் இந்தியாவில்
சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில் டெல்லியில் உள்ள கனடா
இல்லத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
அவர்,சீக்கியர்களின் பாரம்பரிய நடனமான பாங்க்ரா நடனம் ஆடியபடியே
மேடைக்கு வந்தார்.தொடர்ந்து நடனமாடிய ட்ரூடுவுடன் அவரது
மனைவியும் நடனம் ஆடினார்.

short by புனிதா / 12:10:02 on 24 Feb

இந்தியா-கனடா இருநாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என கனடா பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இந்தியா-கனடா இடையே ஒப்பந்தம்
கையெழுத்தானதை தொடர்ந்து பேசிய அவர், இருநாட்டு உறவுகள் மூலம்
வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும் என கூறியுள்ளார்.

short by புனிதா / 11:40:01 on 23 Feb

சென்னையில் வீடு,மனை கண்காட்சியில் பேசிய ஓபிஎஸ், இணைய வழியில்
கட்டட திட்ட அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் 45நாட்களுக்குள் வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.சென்னையின் பரப்பளவு 8,800சதுர
கிலோமீட்டராக அதிகரிக்கப்பட உள்ளதாகவும்
திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர் மாவட்டங்களில் சில பகுதிகள்
இணையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

short by புனிதா / 10:35:01 on 23 Feb

கமல் தன்னுடன் நீண்ட நாட்களாக பயணித்து வருபவர்களை தனது மக்கள்
நீதி மய்யம் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களாக்கி அழகு
பார்த்துள்ளார். 1980களில் கமலுடன் அதிக திரைப்படங்களில் நடித்த
ஸ்ரீப்ரியா, பாலுமகேந்திராவிடம் இணை இயக்குநராக இருந்த சுகா என
மேலும் பலர் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினராகியுள்ளார்.

short by பா.செ.மீனா / 10:11:01 on 23 Feb

இந்தியாவிற்கு குடும்பத்துடன் வருகை தந்துள்ள கனடா பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி வரவேற்றார். இதன்பின்னர்
இருதரப்புக்கு இடையே உறவை மேம்படுத்துவது குறித்து விரிவான
பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனையடுத்து, முக்கியத் துறைகள்
சார்ந்த ஆறு ஒப்பந்தங்கள் இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில்
கையெழுத்திடப்பட்டன.

short by புனிதா / 09:35:01 on 23 Feb

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை
ஜெயலலிதாவின் உருவச்சிலை திறக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் 70-வது
பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமியும், துணை
முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்து சிலையை திறந்து
வைக்கிறார்கள்.

short by புனிதா / 09:26:01 on 23 Feb

சென்னையில் வீடு, மனை கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊரக, நகர்ப்புற
வீட்டு வசதியை மேம்படுத்த அரசு கவனம் செலுத்து வருவதாகவும்,
குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்காக வீட்டு வசதித் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

short by புனிதா / 09:11:01 on 23 Feb

ஆரோவில் பொன்விழாவில் பங்கேற்க நாளை மறுநாள் பிரதமர் மோடி
புதுச்சேரிக்கு வர உள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியி்ன்
பாதுகாப்புப் பணிக்காக 4 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகை
தந்துள்ளனர். மேலும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு கருதி
புதுச்சேரி நகரின் முக்கிய பகுதியில் மதுக்கடைகளை மூட
காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

short by புனிதா / 08:55:01 on 23 Feb

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை
பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். நாளை மாலை 5.30 மணியளவில் கலைவாணர்
அரங்கில் இதற்கான விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக
பிரதமர் மோடி நாளை பிற்பகல் சென்னை வருகிறார். இதை முன்னிட்டு
சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

short by புனிதா / 08:35:01 on 23 Feb

Read more at சமயம்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து கூடுதல்
நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி
உத்தரவிட்டுள்ளார். மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை நாள் ஒன்றுக்கு
விநாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். நீர்
திறப்பின் மூலம் 79,000 விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.

short by புனிதா / 08:15:01 on 23 Feb

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை
ஆணையத்தில் இருந்து மேலும் 3 பேருக்கு சம்மன்
அனுப்பப்பட்டுள்ளது.ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கண்ணன் வரும்
27-ம் தேதி, ஜெயா டிவி சி.இ.ஓ.வுமான விவேக் ஜெயராமன் வரும் 28-ம் தேதி,
சமையலரான சேகர் மார்ச் 2ம் தேதியும் ஆஜராக ஆணையம் தரப்பில் சம்மன்
அனுப்பப்பட்டுள்ளது.

short by புனிதா / 07:56:01 on 23 Feb

2018 -2019ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆன்லைன்
பொறியியல் மூலம் கலந்தாய்வு நடைபெறும். வீட்டிலிருந்தே ஆன்லைனில்
பதிவு செய்து பொறியியல் கலந்தாய்வில் பங்கு கொள்ளலாம் என்று
அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 44
மையங்களில் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

short by புனிதா / 07:26:01 on 23 Feb

இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி
செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். உயர் கல்விக்கு செல்லும்
இந்திய மாணவர்களுக்கு கனடா ஒரு முக்கிய இடமாக உள்ளது என்றும் நமது
நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுபவர்களை
நாம் சகித்துகொள்ளமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

short by புனிதா / 06:35:03 on 23 Feb

தலைமை செயலாளர் தாக்குதல் தொடர்பாக டெல்லி போலீசார் முதல் மந்திரி
கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தினர்.வீட்டிற்குள் இருந்த 21
சிசிடிவி கேமிராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.அதில் 14
கேமிராக்களே வேலைசெய்தன.பிரகாஷ் தன்னை அடித்ததாக கூறப்படும்
அறையில் இருந்த கேமிரா வேலை செய்யவில்லை என போலீஸ் தரப்பில்
கூறப்பட்டு உள்ளது.

short by புனிதா / 06:25:03 on 23 Feb

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக
நீண்ட நாட்களாக தனது பாராளுமன்ற தொகுதியான ரேபரேலிக்கு செல்லாமல்
இருந்தார். இந்நிலையில், நாளை ரேபரேலி தொகுதிக்கு செல்லும் அவர்
அங்கு நடைபெற உள்ள மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்
குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

short by புனிதா / 06:15:03 on 23 Feb

புதுவை வரும் பிரதமர் நரேந்திர மோடியை லாஸ்பேட்டை விமான
நிலையத்தில் பிற்பகல் 3 மணிக்கு சந்தித்து பேச தனக்கும்,
அமைச்சர்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது அவரிடம்
புதுவை மாநில வளர்ச்சி பணிகள் பற்றியும், மத்திய அரசு தரவேண்டிய
நிதி பற்றியும் பேசுவோம் என்று புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி
தெரிவித்துள்ளார்.

short by ரா. சரண்யா / 06:11:01 on 23 Feb

என் குருநாதர், கமல்தான். சினிமாவுல எனக்கு நல்ல வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்தது அவர்தான். இன்னும் நான் கமல் சார்
கட்சியில சேரலை. ஆனா, அவரோட நல்ல திட்டங்களை மக்கள்கிட்ட எடுத்துச்
சொல்வேன். கமல் சார் நிச்சயமா நல்லதுதான் செய்வார் என நடிகர்
வையாபுரி தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 05:56:01 on 23 Feb

Read more at விகடன்

பொதுத்துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்
வாங்கிவிட்டு விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் வெளிநாட்டுக்கு
தப்பி சென்றுவிட்டதை ஹர்திக் பட்டேல் குறிப்பிட்டார். பிரதமரோ,
பாஜகவின் வேறெந்தத் தலைவரோ இருவரையும் குறிப்பிட்ட
காலத்துக்குள் நாட்டுக்கு அழைத்து வருவதாக உறுதி கூறமுடியுமா என
சவால் விட்டார்.

short by ரா. சரண்யா / 05:41:02 on 23 Feb

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் ஆரோக்கிய
கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இயற்கை வகை மருந்துகள், மண்பாண்டங்கள், எண்ணைகள், தைலங்கள் உணவு
தானியங்கள் இயற்கை மருத்துவ புத்தகங்கள் உள்ளிட்டவை தொடர்பான 40
ஸ்டால்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

short by ரா. சரண்யா / 05:10:04 on 23 Feb

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து
எம்.பி.க்களும் ராஜினாமா செய்தால் தானும் ராஜினாமா செய்ய தயார் என
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். மார்ச் 29ம்
தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் 30ம் தேதி
தமிழகம் முழுவதும் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடைபெறும்
என்றார்.

short by புனிதா / 04:35:08 on 23 Feb

கனடா-இந்தியா உறவு பாதுகாப்பு ரீதியில் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தீவரவாதத்தால்
இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் ஆபத்து இருப்பதாகவும்,
தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது இருநாடுகளுக்கும் அவசியமானது
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

short by புனிதா / 04:15:13 on 23 Feb

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர்
மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத்
தலைவர் மாளிகைக்கு காரில் வந்திறங்கிய ட்ரூடோ மற்றும் அவரது
குடும்பத்தினரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் கனடா
பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

short by ரா. சரண்யா / 03:26:01 on 23 Feb

பன்னீர் செல்வம், முதலமைச்சர் பதவி இல்லை என தான் தர்மயுத்தம்
செய்தார். ஒருவருஷம் ஆகிவிட்டது அந்த விரக்தியில் கோபத்தில் அவரே
ஒத்துக்கொண்டார். இது தமிழக மக்களுக்கு தெரிந்தது தான் எனவும்
திடீர் மசாலா போல், குறுக்கு வழியில் முதல்வரானவர் எடப்பாடி
பழனிசாமி எனவும் டிடிவி. தினகரன் கேளி செய்துள்ளார்.

short by பா.செ.மீனா / 01:25:01 on 23 Feb

காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்க்கும் கர்நாடக முதல்வர்
சித்தராமையாவுக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம்
தெரிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக காவிரி உரிமை மீட்புக் குழுவின்
ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற
தீர்ப்பை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக முதல்வர்
கொக்கரித்து வருவதாக சாடினார்.

short by ரா. சரண்யா / 01:11:01 on 23 Feb

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்த
ஆலோசனையின் போது ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தன்னை தாக்கியதாக
அன்சு பிரகாஷ் அளித்த புகாரில் டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு
செய்தது. சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை
கைப்பற்றுவதற்காக டெல்லி காவல்துறை சோதனை செய்து வருகின்றனர்.

short by ரா. சரண்யா / 01:07:35 on 23 Feb

முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து
எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்து விடுவார்கள் என டிடிவி
தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த அவர், எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர்
எனவும் தெரிவித்துள்ளார்.

short by ரா. சரண்யா / 12:55:01 on 23 Feb

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காந்த், 32
மாவட்டங்களிலும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அனைத்து நிர்வாகிகளையும் ஒன்றாக சந்திக்க சிறிது காலம் ஆகும் என
தெரிவித்துள்ளார். மேலும், நேரம் வரும் பொழுது நேரடியாக
சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்திப்பேன் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 12:48:38 on 23 Feb

செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, கமலின் பொதுக் கூட்டம் நன்றாக
இருந்தது. நான் முழுமையாகப் பார்த்தேன். அவருக்கு ஏற்கெனவே
வாழ்த்துகள் தெரிவித்ததாகவும் மீண்டும் தெரிவிப்பதாகவும்
கூறினார். நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும்
மக்களுக்கு நல்லது செய்வதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

short by ரா. சரண்யா / 12:45:02 on 23 Feb

இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை, மோடி வரவேற்காதது சர்ச்சையை
ஏற்படுத்தியது. இதையடுத்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரின்
குழந்தைகளை சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன் என ட்விட்டரில் நேற்று
தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில்,
கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக
வரவேற்றார்.

short by பா.செ.மீனா / 12:25:01 on 23 Feb

Read more at விகடன்

கமல் தனது அரசியல் கட்சியை துவங்கிய நிலையில், ரஜினி பேசுகையில்
ஒரு குடும்பம் சரியாக இருக்க வேண்டுமென்றால் குடும்பத் தலைவன்
சரியாக இருக்க வேண்டும். நான் தலைவனாக சரியாக இருக்கிறேன் என்று
கூறியுள்ளார். மற்றவர்கள் எல்லாம் சத்தம் போட்டால் போடட்டும்,
நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம் என்றும் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 12:18:04 on 23 Feb

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்.களில் ஒருவர் முதல்வராக
வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரனை சந்தித்து பேசிய கள்ளக்குறிச்சி
அதிமுக எம்எல்ஏ பிரபு தெரிவித்தார். மேலும், தமிழகத்தை வழிநடத்த
மக்கள் ஆதரவு பெற்ற தினகரன் பின்னால் செல்ல வேண்டும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 12:10:01 on 23 Feb

டிடிவி. தினகரன் அணியில் தற்போது இணைந்துள்ள கள்ளக்குறிச்சி
எம்.எல்.ஏ பிரபு என் ஸ்லீப்பர் செல் இல்லை என தினகரன்
தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக-வில் உள்ள எனது ஸ்லீப்பர்
செல்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது செயல்படுவர் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 11:32:05 on 23 Feb

தமிழ் பற்றியும், தமிழகம் பற்றியும் ஒன்றுமே தெரியாத கெஜ்ரிவாலை
வைத்து கமல் கட்சி தொடங்கியிருப்பது தமிழகத்திற்கு அவமானம்.
கமல்ஹாசனை பற்றி ஒருவர் காகிதப்பூ மணக்காது என்று
சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், தன்னை விதை என்று கூறியுள்ளார்.
அப்படியென்றால் கமலை காகித விதை என்று சொல்லலாமா என்று
பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 11:25:01 on 23 Feb

கள்ளகுறிச்சி எம்.எல்.ஏ பிரபு, தினகரனுக்கு தனது ஆதரவு தெரிவித்த
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக
பெரும்பான்மையோடு தான் ஆட்சியில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் எம்.எல்.ஏ தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து
முழுவதும் தெரிந்து கொண்டு கருத்து தெரிவிக்கிறேன் என
தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 11:07:18 on 23 Feb

கமல்ஹாசன் புதுவீடியோ ஒன்றை யூ-டியூபில் வெளியிட்டுள்ளார். அந்த
வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, வணக்கம். நீங்கள்
தமிழ்நாட்டில் சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கிறீர்கள் என்றால்,
இந்த வீடியோவை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற வசனங்கள் இடம்
பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு
வருகின்றது.

short by பா.செ.மீனா / 10:55:01 on 23 Feb

ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரனை அவரது இல்லத்தில்
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு சந்தித்து பேசி வருகிறார்.
தினகரனை ஏற்கெனவே எம்எல்ஏக்கள் ரத்தின சபாபதி மற்றும்
கலச்செல்வன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். ஏற்கெனவே இருந்த 18
எம்எல்ஏக்களோடு சேர்த்து தற்போது டிடிவி அணியில் 22 ஆக
உயர்ந்துள்ளது.

short by ரா. சரண்யா / 10:18:01 on 23 Feb

More