View in the JustOut app
X

தமிழ்நாடு சடுகுடு பிரிமீயா் லீக் 2020 போட்டிகளுக்கான 8 அணிகளுக்கு 120 வீரா்களைத் தேர்வு செய்யும் முகாம் திருச்சியில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த லீக் போட்டியானது திருப்பூா், கோவை, சென்னை, மதுரை, சேலம் ஆகிய 5 ஊா்களில் நடத்தப்படவுள்ளது.

01:27:02 on 11 Dec

மேலும் வாசிக்க தினமணி

நேபாளத்தில் நடைபெற்றுவந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்தியா 174 தங்கப் பதக்கங்களுடன் 312 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 1984இல் தெற்காசிய போட்டிகள் தொடங்கியதில் இருந்து பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை வகித்த போதிலும், தற்போதுதான் இந்தியா அதிகப் பதக்கங்களை வென்றுள்ளது.

08:37:48 on 11 Dec

மேலும் வாசிக்க தினகரன்

நேபாளத்தில் நடைபெற்றுவந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்தியா 174 தங்கப் பதக்கங்களுடன் 312 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 1984இல் தெற்காசிய போட்டிகள் தொடங்கியதில் இருந்து பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை வகித்த போதிலும், தற்போதுதான் இந்தியா அதிகப் பதக்கங்களை வென்றுள்ளது.

08:34:33 on 11 Dec

மேலும் வாசிக்க தினகரன்

2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் சிறந்த விளையாட்டு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் ட்விட்டர் பக்கங்களை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் வீரர்களில் கோலிக்கு முதலிடமும், தோனிக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.

05:55:01 on 11 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மதுரை சின்னசொக்கி குளம் பகுதியில் 'டேக்வாண்டோ' என்று சொல்லக்கூடிய கொரியன் தற்காப்புக் கலையை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார் நாராயணன். இவர் இந்தக் கலையை வளர்க்க வேண்டும் என முற்பட்டு கடந்த 2 வருடங்களில் 14 கின்னஸ் சாதனை படைத்து டேக்வாண்டோ கலைக்குப் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

12:27:01 on 10 Dec

மேலும் வாசிக்க விகடன்

விஜயவாடாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பா - ஆந்திரா அணிகள் மோதின. இதில் பேட்டிங் செய்ய ஆந்திரா அணி வீரர்களும், ஃபீல்டிங் செய்ய விதர்பா அணி வீரர்களும் உற்சாகமாக மைதானத்துக்குள் நுழைந்தனர். ஆனால் இரு அணி வீரர்களுக்கும் மைதானத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவர்களுக்கு முன்பாகவே பாம்பு ஒன்று நுழைந்தது.

07:55:01 on 10 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் உருவத்தை வெள்ளி நாணயத்தில் பதித்து சுவிட்சர்லாந்து அரசு கவுரவித்துள்ளது. வாழும் காலத்திலேயே இத்தகைய சிறப்பு பெற்ற வீரர் இவர் ஒருவர்தான். 20 ஸ்விஸ் பிராங்க் நாணயங்களில் பெடரரின் உருவம் அச்சிடப்பட்டு அடுத்த மாதம் புழக்கத்துக்கு விடப்படுகிறது.

01:27:02 on 09 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளில் தற்போது வரை 129 தங்கம், 74 வெள்ளி, 40 வெண்கலத்துடன் மொத்தம் 243 பதக்கங்களைப் வென்று இந்தியா முதலிடத்தில் உள்ளது.

09:57:01 on 09 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20-யில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது. இது குறித்து கோலி, “இந்த பிட்ச் ஸ்பின்னுக்கு உதவும் என்பது தெரிந்த ஒன்று. இதனால் சுழற்பந்து வீச்சை அடித்து ஆட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு ஷிவம் துபே சரியாக இருப்பார் என்று அனுப்பிவைத்தோம்” என்றார்.

09:51:28 on 09 Dec

மேலும் வாசிக்க விகடன்

இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிக்குக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இந்திய அணி விளையாடவுள்ளதால், போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

01:55:02 on 08 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்கிறது.

10:27:01 on 08 Dec

மேலும் வாசிக்க மாலைமலர்

13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதலில் 81 கிலோ பிரிவில் ஸ்ரீஸ்தி சிங், 87 கிலோ பிரிவில் தமிழக வீராங்கனை அனுராதா ஆகியோர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதா, தஞ்சை தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

09:57:01 on 08 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் போட்டி டிச.9ஆம் தேதி தொடங்குகிறது. திண்டுக்கல்லில் நடைபெற உள்ள முதல் போட்டியில் விஜய்சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி கர்நாடகா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

08:55:02 on 07 Dec

மேலும் வாசிக்க சன் நியூஸ்

டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பவுண்டரிகள் மூலம் குறைவான ரன்களைக் குவித்த அணி வெற்றிபெறுவது எப்போதாவது அரிதாக நிகழும். அந்த அரிதான நிகழ்வு நேற்றைய போட்டியில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி, பவுண்டரிகள் மூலம் 134 ரன்கள் குவித்தது. இந்திய அணியோ, அதன்மூலம் 120 ரன்களை மட்டுமே எடுத்தது.

09:57:02 on 07 Dec

மேலும் வாசிக்க விகடன்

உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் நிகேல் சார்ட், ”சென்னையில் செஸ் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் தரப்படுவதுபோல், செஸ் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிரிக்கெட்டை போல் செஸ் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டமிட்டோம்” என்றார்.

03:57:02 on 05 Dec

மேலும் வாசிக்க ETV Bharat

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒருவர், ``மிகவும் திறமையானவர் தோனி. இந்த வீடியோவை இங்கு பதிவு செய்ததற்காக என்னை எதுவும் செய்து விடாதீர்கள். காரணம் இது கட்டாயம் பகிரப்பட வேண்டும்.. சாக்‌ஷி.. உங்களது வீடியோ மிக விரைவில்..” என ஒரு வீடியோ பதிவானது.

12:57:01 on 05 Dec

மேலும் வாசிக்க விகடன்

அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தடம் படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அருண்விஜய் குற்றம்-23 படத்தினை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கவுள்ளார்.

04:57:01 on 04 Dec

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

சென்னையின் எஃப்.சி அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 53 வயது ஓவன் கொய்லே இந்த சீஸன் முடியும் வரை பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் எஃப்.சி அணி, டிசம்பர் 9 அன்று ஜாம்ஷெட்பூா் எஃப்.சி அணியை எதிர்கொள்கிறது.

04:26:36 on 04 Dec

மேலும் வாசிக்க தினமணி

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. நாளைமறுதினம் (டிசம்பர் 6-ந்தேதி) டி20 தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவைச் சேர்ந்த மோன்டி தேசாய்-ஐ பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவரது பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

04:23:03 on 04 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி, ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 3வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் புஜாரா 4வது இடத்திலும், ரஹானே 6வது இடத்திலும் உள்ளனர்.

04:04:27 on 04 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகை டாப்ஸி இன்று தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான மிதாலி ராஜ் குறித்த வாழ்க்கை வரலாறு படத்தில் டாப்ஸி நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

07:57:02 on 03 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

6வது முறையாக தங்கப் பந்து விருதை கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி தட்டி சென்றார். லியோனல் மெஸ்சி இதற்கு முன் 2009, 2010, 2011, 2012, 2015 ஆகிய 5 ஆண்டுகள் இந்த விருதை பெற்றுள்ள நிலையில், தற்போது 6வது முறையாக பெற்றுள்ளார்.

12:27:01 on 03 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

புதிய விதிமுறையின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகியாக இருக்க முடியாது. மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் 6 ஆண்டுகள் மட்டுமே தொடர்ச்சியாக பதவியில் நீடிக்க முடியும்.

05:33:57 on 02 Dec

மேலும் வாசிக்க தமிழ் முரசு

அடுத்த வருட ஐபிஎல் போட்டியையாவது வெல்வோமா என்கிற ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார் ஓர் இளம் வீரர். தேவ்தத் படிக்கல் என்கிற இளம் வீரரைக் கடந்த வருடம் ரூ.10 லட்சத்துக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. அந்த 19 வயது வீரர் தான் தற்போது இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் நெ.1 வீரராக உள்ளார்.

05:30:01 on 02 Dec

மேலும் வாசிக்க தினமணி

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 13-வது தெற்காசியப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று நடந்த ஆடவர்களுக்கான டிரையத்லான் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது. இந்தியாவின் ஆதர்ஷா எம்என் சினிமோல் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார். சக இந்திய வீரர் பிஷ்வோர்ஜித் ஸ்ரீகோம் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளி வென்றார்.

05:26:54 on 02 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 13-வது தெற்காசியப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று நடந்த ஆடவர்களுக்கான டிரையத்லான் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது. இந்தியாவின் ஆதர்ஷா எம்என் சினிமோல் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார். சக இந்திய வீரர் பிஷ்வோர்ஜித் ஸ்ரீகோம் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளி வென்றார்.

05:23:54 on 02 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இளையோர் உலக கோப்பை கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. யஷாஷ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்சேனா, ஷாஷ்வத் ராவத், திவ்யான்ஷ் ஜோஷி, சுபாங்க் ஹெக்டே, ரவி பிஷ்னோய், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அதர்வா அங்கோலேகர், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), சுஷாந்த் மிஷ்ரா, வித்யாதர் பாட்டீல் ஆகியோர் உள்ளனர்.

05:21:16 on 02 Dec

மேலும் வாசிக்க தினத்தந்தி

தெற்காசிய போட்டியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் டி20 கிரிக்கெட் போட்டியில் மோதின. முதலில் மாலத்தீவு அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 10.1 ஓவரில் வெறும் 16 ரன்களே எடுத்து ஆல்அவுட் ஆனது மாலத்தீவு. நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் 13 பந்துகளில் ரன்ஏதும் விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

05:18:41 on 02 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார். 126 இன்னிங்ஸில் 7,000 ரன்களை கடந்து இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

11:10:37 on 30 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னரே, இலங்கையில் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழ்நிலை உருவானதாக முரளிதரன் குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்சே, தற்போது அதிபராக பொறுப்பேற்ற பின், முரளிதரன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

05:55:01 on 30 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் நோ பால் தொடர்பாகச் சில சர்ச்சைகள் ஏற்பட்டன. இதையடுத்து அதுபோன்ற சூழல்கள் மேலும் ஏற்படாதவாறு இருக்க பிசிசிஐ சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. அதன்படி, அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் நோ பால் தவறுகளைக் கண்டுபிடிக்கத் தனி நடுவர் நியமிக்கப்படவுள்ளார்.

09:57:01 on 29 Nov

மேலும் வாசிக்க தினமணி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டம் டிசம்பர் 6-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் 6-ந்தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த ஆட்டம் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

10:55:01 on 27 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசம் அணி தங்கள் நாட்டில் இரு டி20 போட்டிகளை நடத்துகிறது. ஆசியா XI மற்றும் உலக நாடுகள் XI இடையே இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியில் இருந்து 7 வீரர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ அமைப்பிடம் கேட்டுள்ளது. அதில் முதல் வீரராக தோனி உள்ளார்.

05:57:11 on 27 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனி ஓய்வு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''தோனி மீண்டும் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து தான் உள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க வேண்டும்.” என்றார்.

01:55:01 on 27 Nov

மேலும் வாசிக்க Behind Woods News

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 928 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். 29ஆம் தேதி தொடங்கும் 2-வது போட்டியிலும் ஸ்மித் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட் கோலி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

10:55:01 on 26 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

தென்னாப்பிரிக்காவில் மெசான்ஸி சூப்பர் லீக் போட்டியில் ஸ்டார்ஸ் அணி சார்பாக கிறிஸ் கெய்ல் வீசிய பந்து பேட்ஸ்மேனின் காலிடுக்கில் சென்றது. ஆனால் கிறிஸ் கெயில் அதற்கு அவுட் கேட்டு அப்பீல் செய்தார். ஆனால், நடுவர் அவுட் தர மறுக்கவே, சின்னக் குழந்தை அழுது அடம்பிடிப்பது மாதிரி கெய்ல் ரியாக்‌ஷன் செய்தார்.

01:55:01 on 26 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்திய அணி வெற்றிபெற்ற பிறகு கோப்பை வழங்கும் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் கங்குலி. அதில் கங்குலியின் போஸை கலாய்க்கும் விதமாக அவரின் மகள் சனா கங்குலி தந்தையின் புகைப்படத்துக்கு கீழே, ``உங்களுக்கு இது பிடிக்கவில்லையா?'' என கமென்ட் பதிவிட்டார்.

01:27:01 on 26 Nov

மேலும் வாசிக்க விகடன்

பாகிஸ்தான் அணியின் யாசிர் ஷா, ஷாஹீன் உள்ளிட்ட 5 வீரர்களை, பிரிஸ்பேனில் உள்ள இந்திய கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கு டாக்ஸி டிரைவர் அவர்களிடம் கட்டணம் பெற மறுத்துள்ளார். அவரின் அன்பைப் பார்த்த பாகிஸ்தான் வீரர்கள், டிரைவரையும் தங்களுடன் விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

11:27:01 on 26 Nov

மேலும் வாசிக்க விகடன்

திருப்பதியில் நடந்து முடிந்த தேசிய தடகள விளையாட்டு போட்டியில் தமிழகத்திற்கு 5 தங்க பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

09:57:01 on 26 Nov

மேலும் வாசிக்க தினமணி

இந்தியாவின் நட்சத்திர கார் பந்தயகாரரும், முதல் பந்தய கார் ஓட்டுநருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன், நேற்று ஜப்பானில் நடைபெற்ற சூப்பர் ஜீடி எக்ஸ் டிடீஎம் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். இந்த பந்தயத்தில் உலகம் முழுவதும் இருந்து 21 பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.

02:57:02 on 25 Nov

மேலும் வாசிக்க ETV Bharat

மேலும் வாசிக்க