View in the JustOut app
X

ரிசாட்-2 பிஆர் 1 மற்றும் 9 வணிக ரீதியான செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாயந்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது, புவிகண்காணிப்பு, விவசாய மேம்பாடு, காடுகள் கண்காணிப்பு மற்றும் வளம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும்.

03:52:21 on 11 Dec

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

10:27:02 on 10 Dec

மேலும் வாசிக்க மாலைமலர்

புதிய 5ஜி நெட்வொர்க் அதிவேகமானதாக இருக்கப் போகிறது. ஆனால், 5ஜி ஆன்டனாக்கள் முந்தைய செல்போன் நெட்வொர்க்குகளைவிட அதிக ரேடியோ கதிர்வீச்சுகளைக் கொண்டதாக இருக்கும். இதனால் உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படும் என்று பிரிட்டனைச் சேர்ந்த சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

06:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பிரபல 'கார்மின் இந்தியா' வாட்ச் நிறுவனம், அமோல்டு டிஸ்பிளேயுடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சுவாசம், தூக்கம், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, இதயத்துடிப்பு உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் வசதி இதில் உள்ளது.

08:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க தினமணி

புதிய ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஐபோன் 11 சாதனங்களில் லொகேஷன் சேவைகள் ஆஃப் செய்யப்பட்டாலும், அவை வாடிக்கையாளர்களின் லொகேஷன் விவரங்களை சேகரிப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு ஆப்பிள் நிறுவனம், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என தெரிவித்துள்ளது.

08:57:02 on 08 Dec

மேலும் வாசிக்க மாலைமலர்

Realme XT 730G டிசம்பர் 17ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ரியல்மி வெள்ளிக்கிழமை அனுப்பிய ஊடக அழைப்பின் மூலம் தெரியவந்துள்ளது. Realme XT 730G செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme X2-வின் இந்தியா வேரியண்டாக அறிமுகமாகும்.

06:55:01 on 07 Dec

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் பேண்ட் 5 ஃபிட்னஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஏழு நாட்கள் பேட்டரி பேக்கப், 22 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வசதியை கொண்டுள்ளது இந்த மாடல். இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலின் விலையைப் பொறுத்தவரை ரூ.17,999-ஆக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

03:27:01 on 06 Dec

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சியோமியை தொடர்ந்து நோக்கியா மொபைல் நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. நோக்கியாவின் 5ஜி ஸ்மார்டபோன் பியூர்டிஸ்ப்ளே, செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 4K UHD அல்ட்ரா வைடு வீடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

07:55:02 on 05 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டது. இரவில் நடத்தப்பட்ட சோதனையில் பிரித்வி ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:57:01 on 04 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த 33 வயது சண்முக சுப்ரமணியம் நாசா விண்கலன் எடுத்த புகைப்படங்களின் உதவியோடு நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை அடையாளம் கண்டுள்ளார்.

06:55:01 on 03 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டறிவதற்காக பல ஆய்வாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேடியதாகவும், அதில் சண்முக சுப்ரமணியன் என்ற இந்திய பொறியாளர் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தியதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

11:57:01 on 03 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த நாசா, எல்ஆர்ஓ ஆர்பிட்டர் கேமராவின் உதவியுடன் அதனால் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புகைப்படம் எடுத்து செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் நீலம் மற்றும் பச்சை நிறப்புள்ளிகளாகக் காணப்படுகிறது.

10:27:01 on 03 Dec

மேலும் வாசிக்க மாலைமலர்

மீம்ஸ்கள் நாம் மட்டும் ரசித்தால் போதாது, பார்வையில்லா மாற்றுத்திறனாளிகளும் ரசிக்க வேண்டும் என புது தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் புதிய தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்பட்டது.

05:57:01 on 03 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

கூகுள், உலக அளவில் அதன் வாடிக்கையாளர்கள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேருக்கு இந்த எச்சரிக்கை தகவல் வந்து இருக்கின்றன.

02:57:01 on 29 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

Reno 3 சீரிஸ் அடுத்த மாதம் dual-mode 5G ஆதரவுடன் அறிமுகமாகும் என்பதை Oppo சமீபத்தில் உறுதிப்படுத்தியது. போனின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, ஓப்போவின் துணைத் தலைவரும், உலகளாவிய சந்தைப்படுத்தல் தலைவருமான பிரையன் ஷென், அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படக்கூடிய Oppo Reno 3 Pro 5G போனின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

06:56:01 on 29 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ரியல்மி நிறுவனம் Realme X50 என்ற 5ஜி போனை, விற்பனைக்கு களமிறக்க போவதாக கூறியுள்ளது. Realme X50 முதலில் சீனாவில் விற்பனைக்கு வரும். அதன் பின்னர் இந்தியாவில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனானது விரைவில் வெளியாக உள்ள ரெட்மி கே30 5ஜி போனுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

07:55:02 on 28 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவும் கார்டோசாட்-3 செயற்கைக் கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி47 ராக்கெட் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

09:35:10 on 27 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் டீசர் மூலம் அறிவித்துள்ளது.

06:55:01 on 26 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

கூகுள் நிறுவனம் நெஸ்ட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேம்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

01:55:02 on 26 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

Honor V30 மற்றும் Honor V30 Pro ஆகியவை நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஆனால், அவை முறையாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஹவாய் துணை பிராண்ட் ஹானர் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் HiSilicon Kirin 990 SoC உடன் வந்து 5G இணைப்பை ஆதரிக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

05:55:01 on 25 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மேலும் வாசிக்க