View in the JustOut app
X

தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹைக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு எதிரான ஊழல் வழக்குகளில் அவருக்கு ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 2 புதிய வழக்குகள் மூலம் அவருக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

02:40:02 on 21 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வரி விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார். அரசியல் உள்நோக்கத்துடன் இதை செய்யவில்லை எனவும், நாட்டுக்கு தேவையான விஷயத்தையே செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

02:25:02 on 21 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

நாசா விஞ்ஞானி தாமஸ் எலிசியம் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், கண்முன் தோன்றும் நிலா எனும் சொர்க்கத்திற்கு அஸ்தியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என தெரிவித்தார். 2013-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இதுவரை பலரது அஸ்தி சாம்பல்களை சேகரித்து வைத்துள்ளது.

12:40:01 on 21 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

நேர்முக நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மோன்டெநிக்ரோவில் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் மட்டுமே இருந்தாலும், அவர்கள் ஆக்ரோஷமானவர்கள் என்பதால் அவர்களால் மூன்றாம் உலகப் போரைத்தொடங்கிட முடியும் என பதிலளித்தார். டிரம்பின் இந்த கருத்துக்கு எதிர்ப்புக்கள் வலுத்து வருகின்றன.

12:10:02 on 21 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
முகமூடி அணிந்து வீடியோவில் அந்த மத போதகர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் தெரிவித்து உள்ளார்.

11:55:01 on 20 Jul

மேலும் வாசிக்க தினமலர்

சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார். தொடக்கத்தில் அவர் சவுதி அரேபியா ராணுவத்தில் பணிபுரிந்தார்.
டாக்டர்கள் குழு அதற்கான காரணத்தை ஆய்வு செய்தனர். சரியான காரணம் தெரியாவிட்டாலும் அவரின் மனஅழுத்தமே இதற்கு காரணமாக இருக் கலாம் என தெரிவித்துள் ளனர்.

11:40:02 on 20 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெற்ற சந்திப்பை விமர்சிக்கும் அமெரிக்கர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண்டித்துள்ளார். பின்லாந்தில் நடைபெற்ற ரஷ்ய - அமெரிக்க நாட்டு தலைவர்களின் உச்சி மாநாடு முடிவுகளை இந்த விமர்சகர்கள் குறைத்து மதிப்பிட முயல்வதாக புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

02:11:02 on 20 Jul

மேலும் வாசிக்க தினகரன்

இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது, 'முழுமையான மற்றும் ஒற்றுமையான' ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்கிறது.

07:41:02 on 20 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்கின்றன. அங்கு புதிதாக ஆயுத சோதனை எதுவும் நடைபெறவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

05:40:01 on 20 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டைஸ் நெல்சன் - மேரி வோல்ஃப் நெல்சன் தம்பதியர், சாகசம் செய்தனர். சாகசத்தின் போது பிடி நழுவியதால் மேரி நெல்சன் கீழே விழுந்தார்.இதைப் பார்த்த பார்வையாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக, சிறிது நேரத்தில் மேரி நெல்சன் மேடையில் இருந்து எழுந்தார்.

04:40:01 on 20 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

“Bohemian Rhapsody" படத்தின் புதிய டிரைலர் 20th Century Fox நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. Freddie Mercury என்ற இசைக் கலைஞரின் வாழ்வை இது மையமாகக் கொண்ட திரைப்படம். ரெமி மாலெக் என்பவர் இதில் ஃபிரெட்டியாக நடித்துள்ளார். இந்தப் படம் நவம்பர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது.

03:25:01 on 20 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க பாதிரியாரை விடுவிக்க வேண்டும் என துருக்கி அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

01:40:01 on 20 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் யார்?” என்ற கேள்விக்கு முன்னாள் பிரதமர் அப்பாசி நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப் என பதில் தெரிவித்துள்ளார்.

12:25:02 on 20 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

’ஈரானுடனான உறவுகள் என்பது இந்தியாவின் சொந்த நிலைப்பாடு. இதில் 3-வது நாட்டின் தலையீடு இல்லை. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது’ என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறியுள்ளார்.

10:40:01 on 19 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஈராக், சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான படகு பயணத்தின் மூலம் அகதிகளாக மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைவது தொடர்கதையாக உள்ளது. சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

02:10:02 on 19 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

துருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது அந்நாட்டு அரசு.

12:10:42 on 19 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

’நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, மார்டின் லுாதர் கிங், ஆப்ரஹாம் லிங்கன் ஆகியோரின் சம உரிமை, சமூக நீதி, சுதந்திரம், வேற்றுமையில் ஒற்றுமை உள்ளிட்ட கொள்கைகளில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அத்தகைய கொள்கைகளால் நிர்வகிக்கப்படும்போதே, உலகில் மேலும் அமைதி ஏற்படும்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

11:11:01 on 19 Jul

மேலும் வாசிக்க தின மலர்

ஸ்கைடிராக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த விமான நிறுவனங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கத்தார் ஏர்வேஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

05:40:01 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஓஏஜி ஏவியேசன் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் நேரம் தவறாமையைக் கடைபிடித்து வரும் 20 விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் இண்டிகோ நிறுவனம் நான்காவது இடம் பெற்றுள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ், நிப்பான் ஏர்வேஸ் ஆகியவை முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளன. மூன்றாம் இடத்தை டெல்டா ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது

04:10:01 on 19 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

50 ஆண்டு கால இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

10:40:01 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ரஷ்ய அதிபர் புதின் முன் நனைந்த நூடுல்ஸ் போல நின்றீர்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை அர்னாட்ல்ட் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

09:40:01 on 18 Jul

மேலும் வாசிக்க தி இந்து

அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது.

07:40:02 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவான அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ரஷிய உளவாளியாக நடித்த மரியா புட்டினாவை வாஷிங்டன் போலீசார் கைது செய்தனர்.

06:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. கொலம்பியாவில் இருந்து பலர் எல்லை தாண்டி இங்கு நுழைகின்றனர். இதனால், பெரு நாட்டில் போதை மருந்து கடத்தலை தடுக்க 60 நாள் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

05:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள், பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தாய்லாந்து சிறுவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன் சியாங்ராய் நகரில் இருந்து தேசிய அளவில் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட 12 சிறுவர்களும் இதனை தெரிவித்துள்ளனர்.

05:17:39 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

பயிற்சியாளருடன் சுற்றுலா சென்றபோது தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர். இதன்பின் சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

04:33:08 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

இங்கிலாந்தின், பர்மிங்ஹாம் பகுதியில் வேலையில் சேர்வதற்காக 20 மைல் தூரம் நடந்துசென்றவருக்கு, நிறுவன உரிமையாளர், அவரது சொந்தக் காரை பரிசாக அளித்துள்ளார்.

02:36:28 on 18 Jul

மேலும் வாசிக்க விகடன்

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் ஐஸிக் குல் என்ற இடத்தில் கோல்டன் கழுகுகளை வைத்து சிலர் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தக் கழுகு, தனது இரை என நினைத்து சிறுமியைத் தூக்கிச் செல்ல முயன்றது. பின்னர், அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று சிறுமியைக் காப்பாற்றினர்.

11:40:02 on 18 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பிறகு ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு பொருளாதார தடைகளை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்படும் என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

08:41:01 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவான அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ரஷிய உளவாளியாக நடித்த பெண்ணை அமெரிக்க உளவுப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்தனர். இதனையடுத்து இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

05:25:02 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அதன் ஊழியர்கள் மூவாயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, பணிக்கு தொடர்ந்து தாமதமாக வரும் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், தாமதம் என்பது ஒரு நிமிடமாக இருந்தாலும் கூட விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

05:10:01 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

தலிபான் தீவிரவாதிகளுடன் நேரடியாக பேச்சு நடத்த தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கும் அமைப்பின் தலைவரான ஜான் நிக்கோல்சன், 17 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா விரும்புவதாக கூறியுள்ளார்.

04:40:01 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

சிரியா முகாம்களின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் போரில் பாதிக்கப்படும் சிரிய மக்களுக்குக்கான உதவும் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

02:40:01 on 18 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அமெரிக்காவில் மலையிலிருந்து காருடன் கவிழ்ந்த பெண் ஒருவர், ஏழு நாட்களுக்குப்பின் உயிரோடு மீட்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.

02:10:02 on 18 Jul

மேலும் வாசிக்க தினமலர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்ற 2 பேரின் கோரிக்கையையும் இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிராகரித்தது.

01:40:01 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

கல்நார் சுரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நகரம் இது. இந்த நகரம் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதனை பிசாசு நகரம் என்று அழைக்கின்றனர். இந்த பிசாசு நகரத்திற்கு செல்ல வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், மக்களும் சுற்றுலா பயணிகளும் திகில் அனுபவத்துக்காக செல்கின்றனர்.

12:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், பூமிக்கு அடியில் 100 மைல் ஆழத்தில் பல லட்சம் கோடி வைரங்கள் புதைந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.

11:25:01 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

இங்கிலாந்தில் குழந்தையின் மூளையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் படத்தில், இறந்துபோன அவரது தாத்தாவின் முகம் தெரிந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தனர்.

10:56:01 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

பங்குச் சந்தை கணிப்பில் ஜாம்பவானும் பிரபல தொழிலதிபருமான வாரன் பஃபெட், கடந்த 12 ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி டாலர்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் நன்கொடையாக அளித்துள்ளார்.இந்நிலையில், தொடர்ந்து 13-வது ஆண்டாக தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் 340 கோடி டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளார்.

10:40:01 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் , சிறையில் மோசமான அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சபாஜ் ஷெரீப் கூறியுள்ளார்.

10:11:01 on 17 Jul

மேலும் வாசிக்க தினமலர்

பனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

02:26:01 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆஸ்திரியாவில் தனக்கு நேர்ந்த இனம் சார்ந்த பாகுபாடு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்து அந்நிறுவனத்தால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் இனவெறிக்கெதிரான வலைப்பூவை தொடங்கியுள்ளார்.

01:41:02 on 17 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்த முதலை, விவசாயியை கொன்றதால் ஆவேசமடைந்த கிராமத்தினர் 300 முதலைகளை கொன்று குவித்தனர்.

01:24:51 on 17 Jul

மேலும் வாசிக்க தினமலர்

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் வகையில் ரஷ்யா மீது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

01:11:01 on 17 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாகிஸ்தானில் ஏராளமான தலித்துகள் சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள். ”வெற்றி பெறுகிறோமா என்பது முக்கியம் இல்லை. எங்களது இருப்பை பொதுசமூகத்திற்கு உணர்த்துவதற்காகதான் போட்டியிடுகிறோம்” என்கிறார்கள் அம்மக்கள்.

11:32:11 on 17 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தென் ஆப்ரிக்காவில், மாலி நாட்டில், கவுமாகா எனும் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பலியாயினர். வாகனங்கள் சிலவும் தீயில் எரிந்து நாசமாயின. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

07:55:01 on 17 Jul

மேலும் வாசிக்க தின மலர்

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ், அந்நாட்டின் முன்னாள் ஆளுங்கட்சி. பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சிதான் பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி. ஜூல்ஃபிகர் அலி பூட்டோவால் 1967 ஆம் ஆண்டு பாகிஸ்தானில், ஒரு இடதுசாரி சோசலிச முன்னேற்ற கட்சியாக நிறுவப்பட்டதுதான் இந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி.

05:25:01 on 17 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

04:40:01 on 17 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சீனாவில் தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து போலீசாருக்கு அதிநவீன ஆயுதங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. லுவோயாங் ((Luoyang)) மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பள்ளியில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

02:25:01 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர்

ஈராக்கின் பஸ்ரா நகரில் தொடங்கிய கலவரம் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. வேலையில்லா திண்டாட்டம், திறமையற்ற நிர்வாகம், தொடரும் ஊழல் என்ற காரணங்களை வலியுறுத்தி ஈராக்கின் வடக்குப் பகுதியில் அரசுக்கு எதிரான போராட்டத்தை பொதுமக்கள் கையிலெடுத்தனர்.

01:25:01 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர்

பாகிஸ்தானில் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள ராட்டினம் ஒன்றில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி விளையாட வைத்ததால் ராட்டினம் தூக்கி வீசப்பட்டு விபத்து ஏற்பட்டது. இதில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் படுகாயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

12:40:02 on 17 Jul

மேலும் வாசிக்க பாலிமர்

சீனாவில் இகாரஸ் கோப்பைக்கான 45வது சர்வதேச பறக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. பாராசூட், பாராகிளைடிங், பலூன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தி பறப்பதே இந்தப் போட்டியின் நோக்கம். வடமேற்கு சீனாவின் கிங்ஹாய் ((Qinghai)) மாகாணத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

11:25:01 on 16 Jul

மேலும் வாசிக்க பாலிமர்

இங்கிலாந்து விமானப்படையான ராயல் ஏர்ஃபோர்ஸின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பம்சமாக 120 மில்லியன் பவுண்டு மதிப்பு கொண்ட எப் 35 லைட்னிங் 2 வகையைச் சேர்ந்த போர் விமானத்தை நடுவானில் அந்தரத்தில் நிறுத்தி விமானி சாதனை செய்தார்.

10:26:01 on 16 Jul

மேலும் வாசிக்க பாலிமர்

இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

07:26:01 on 16 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஒரு வாரத்திற்கு முன்பு மாயமான ஓரிகான் பெண், கலிப்போர்னியா செங்குத்து பாறைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர், வாகனத்தின் ரேடியேட்டரில் இருந்து வெளிவந்த தண்ணீரை குடித்து கடந்த ஒரு வாரமாக உயிர் பிழைத்துள்ளார் என்று நெடுஞ்சாலை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

05:25:01 on 16 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சீனாவில் ஏர் சைனா விமானத்தில் சிகரெட் பிடித்து அவசரநிலையை ஏற்படுத்திய துணை விமானியை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர்.

05:25:02 on 16 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

"ஹமாஸ் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது, தேவைப்பட்டால் அது மேலும் கடுமையாக்கப்படும்" இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

01:40:02 on 16 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தேர்தல் பிரசாரத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 130 ஆனது. பாக்.கில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

08:55:01 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கட்சியின் பெயரில் இருந்த பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக ஹபீஸ் கட்சி செய்தி தொடர்பாளர், ’எங்கள் வேட்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் உரிய காரணம் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளன’ என்றார்.

08:10:01 on 15 Jul

மேலும் வாசிக்க தின மலர்

அகதிகள் விவகாரத்தில் குழந்தைகளை பெற்றோருடன் இணைக்க ஆகும் செலவை அரசுதான் ஏற்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

05:26:01 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஹைதியில் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை போராட்டங்களை அடுத்து, அந்நாட்டின் பிரதமர் ஜாக் கய் லபோன்டன்ட் பதவி விலகியுள்ளார்.

03:40:01 on 15 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தென் அமெரிக்காவில் உள்ள நிகாரகுவாவ நாட்டில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்துக்கு திரண்ட மாணவர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியல் ஒரு மாணவர் உயிரிழந்தார்.

01:02:42 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

கத்தார் விமான நடுவானின் பயணித்துக்கொண்டிருந்த போது, விமானத்தில் பயணி ஒருவர் தீடிரென சக பயணிகளிடம் பிச்சை எடுக்க துவங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

09:41:01 on 14 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

எகிப்து நாட்டில் 1 போலீஸ்காரரும், 1 பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்ட வழக்கை நைல் நதி நகரமான எல் ஜகாஜிக்கில் உள்ள கிரிமினல் கோர்ட்டு விசாரித்தது. இதில் 18 பேரும், அங்குள்ள மற்றொரு நகரமான இஸ்மாய்லியாவில் சிறையில் இருந்து தப்பிய மத அடிப்படையிலான 18 பயங்கரவாதிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

09:26:01 on 14 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சீனாவில் கடந்த சில நாட்களாக பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 24 மாகாணங்களில் உள்ள 241 ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஏராளமான சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

08:11:01 on 14 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

தென் மேற்கு பாகிஸ்தானில் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒரு தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாஸ்துங்கில் நடந்த தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலுசிஸ்தான் மாகாண வேட்பாளர் சிராஜ் ரைசனியும் இதில் கொல்லப்பட்டார்.

07:11:01 on 14 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அரசு முறைப்பயணமாக பிரிட்டன் சென்றார் டிரம்ப், அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் லண்டன் அரண்மணையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலினாவும் சென்றார். டிரம்ப், எலிசபெத் இருவரும் 25 நிமிடம் சந்தித்து பேசினர்.

04:11:01 on 14 Jul

மேலும் வாசிக்க தினமலர்

தாய்லாந்தில் 12 சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர் மீட்கப்பட்ட 'தாம் லுவாங்' குகை மியூசியமாக மாற்றப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக குகைக்குள்ளும் வெளிபுறத்திலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் மீட்பு குழுவின் தலைவர் நரோங்சாக் ஒசோட்டனகோர்ன் தெரிவித்தார்.

01:11:01 on 14 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பனாமா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை லாகூர் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இருவரையும் ராவல்பிண்டிக்கு அழைத்துச் சென்றனர். பின்பு அவர்களை அங்குள்ள அடியாலா சிறையில் அடைத்தனர்.

10:11:01 on 14 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

08:25:01 on 14 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தற்போது அபுதாபியிலிருந்து பாகிஸ்தான் திரும்பியுள்ளார். லாகூரில் நவாஸையும் அவரது மகளையும் கைது செய்ய போலீஸ் தயாராக உள்ளது.

07:25:01 on 14 Jul

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவால் தேடப்பட்டும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது முடிவுக்கு மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

05:56:01 on 14 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த பிரச்சாரத்தின்போது பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. பாகிஸ்தானில் முத்தாஹிதா இ அமால் கட்சியின் வேட்பாளரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

12:40:01 on 14 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

வடகொரிய தலைவர் கிம், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, '' மாண்புமிகு அதிபரின் ஆற்றல்மிகுந்த மற்றும் அசாதாரண முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன்'' என கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள டிரம்ப் ''மிகவும் அருமையான குறிப்பு இது '' எனத் தெரிவித்துள்ளார்.

10:56:01 on 13 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொலம்பியாவில் கட்டி முடிக்கப்படாத சிராஜீரா பாலம் தகர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இந்தப்பாலம் ஓரளவு இடிந்தபோது, ஒன்பது கட்டுமான தொழிலாளர்கள் பலியாகினர். இந்த திட்டத்தின் தோல்விக்கு வடிவமைப்பே காரணம் என்று புலனாய்வில் தெரியவந்த பின், இதனை தகர்த்துவிட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

07:25:01 on 13 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ட்விட்டர் ஃபாளோவர்கள் எண்ணிக்கை முறையே சுமார் ஒரு லட்சம் மற்றும் நான்கு லட்சம் வரை குறைந்துள்ளது. உலகளவில் பல லட்சம் கணக்குகள் முடக்கப்படுவதால் இவ்வாறு ஃபாளோவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

12:45:27 on 13 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பணக்கார பெண்கள் பட்டியலில் இரு இந்திய வம்சாவளி பெண்களான ஜெயஸ்ரீ உல்லால்(57), நீரஜா சேத்தி(60) ஆகிய இரு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் போர்ப்ஸ் பட்டியலில் முறையே 16 மற்றும் 21ஆம் இடத்திலும் உள்ளனர்.

09:11:01 on 13 Jul

மேலும் வாசிக்க தினமலர்

பனாமா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று நாடு திரும்புவதாகவும், இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷெரீப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு ஏற்பாடுகள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

07:40:01 on 13 Jul

மேலும் வாசிக்க தினமலர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், ’புதின் எனது போட்டியாளர்தான், எதிரி இல்லை. ஒருநாள் புதின் எனது நண்பராகக் கூட ஆகலாம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

06:10:01 on 13 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

26 ஆண்டுகளுக்கு பிறகு மிக பலத்த மழை பெய்து வருவதால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இதுவரை 86 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளனர்.

01:55:02 on 13 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பதவி வகிப்பவர், டேவிட் ஹேலே. இவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றிவிட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென முடிவு எடுத்து உள்ளார். டேவிட் ஹேலேவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி வழங்க அவர் தீர்மானித்து இருக்கிறார்.

12:55:02 on 13 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31). இவர் பணியாற்றிய ஆஸ்பத்திரியில், மருந்தில் விஷத்தை கலந்து இதுவரை 20 நோயாளிகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:25:01 on 12 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜெர்மனியில் நாஜிக்களை ஆதரிக்கும் குழு ஒன்றைச் சேர்ந்த பீட் ஷேப்பே எனும் 43 வயதாகும் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன வெறியின் காரணமாக 10 கொலைகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

08:41:02 on 12 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சிறுவர்களைக் குகையில் இருந்து உயிருடன் அழைத்து வரும் அபாயகரமான நடவடிக்கையின் புதிய தகவலாக இப்புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், மீட்புப் பணி எப்படி நடந்தது என்பது குறித்த காணொளியையும் தாய்லாந்து கடற்படை வெளியிட்டுள்ளது.

01:56:01 on 12 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஈரானில் பேருந்து மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்தனர். நேற்று காலை தெஹ்ரானில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சனந்தஜ் பகுதியில் பயணிகள் பேருந்து மீது தார் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

05:56:01 on 12 Jul

மேலும் வாசிக்க பாலிமர்

சீனாவில் மாநில அதிகாரத்தை அகற்ற வேண்டும் என்று ஜனநாயகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்த 64 வயதான சின் யொங்மின் அவர்களுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

04:55:01 on 12 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு, குறைந்த நேரத்தில் விண்கலத்தை அனுப்பி ரஷ்யா சாதனை படைத்தது.

02:10:01 on 12 Jul

மேலும் வாசிக்க தினமலர்

இலங்கையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை களையெடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் போதைப் பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு இலங்கை அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

08:40:02 on 11 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

59 வயதான நியோல் சின்ரோன் என்பவர் 20 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க அதிபர் டிரம்பின் ஓட்டுநராக பணிபுரிந்தவர். அதிக நேரம் பணி செய்ததற்கான ஊதியத்தை வழங்கவில்லை என டிரம்ப் நிறுவனத்தின் மீது, தற்போது அவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

06:26:02 on 11 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

குகையின் உள் பகுதி சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில இடங்கள் மிகவும் குறுகலானவை. ஒரு இடம் வெறும் 40 செ.மீ. அகலம் மட்டுமே உடையது. மீட்புப் பணியாளர்கள் தங்கள் காற்று உருளையையோடு அந்த இடங்களை நீந்திக் கடப்பது கடினம். எனவே, அவர்கள் தங்கள் உருளையை கழற்றி எடுத்துக் கொண்டுதான் அந்த இடங்களைக் கடக்க முடியும்.

01:26:40 on 11 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க இந்தியாவை சேர்ந்த நிறுவனம் உதவி செய்தது தெரிய வந்துள்ளது. சிறுவர்களை மீட்க மஹாராஷ்டிர மாநிலம், புனேயை தலைமையிடமாக கொண்டு செயல்படும், கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட்(கேபிஎல்) என்ற நிறுவனத்தை, இந்திய தூதரகம் பரிந்துரை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

12:14:48 on 11 Jul

மேலும் வாசிக்க தினமலர்

பாகிஸ்தானில் தேர்தல் பேரணியில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் அவாமி தேசிய கட்சியின் தலைவர் உள்பட 14 பேர் பலியாகினர்.

10:10:01 on 11 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஆப்கானிஸ்தானில், ஜலாலாபாத் நகரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே திடீரென பயங்கரச் சத்தத்துடன் குண்டு வெடித்தது. தற்கொலைப்படை நடத்திய இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

12:25:02 on 11 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

இலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா (40 வயது) சுட்டுக் கொல்லப்பட்டார். நவோதய மக்கள் முன்னணி தலைவர், கிருஷ்ணா, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புறக்கோட்டை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

10:11:01 on 10 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அணு ஆயுதங்கள் ஒழிப்பை ஆய்வுசெய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ, வடகொரியாவில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் தன் ட்விட்டர் செய்தியில், வடகொரியா மீது அதிக அழுத்தம் குறித்து விவாதித்தோம், என குறிப்பிட்டார். அதனால், அணு ஆயுத ஒழிப்பில் அமெரிக்கா ரவுடித்தனமாக நடந்து கொள்வதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை எழும் நிலை ஏற்பட்டுள்ளது.

09:10:01 on 10 Jul

மேலும் வாசிக்க தினமலர்

மும்பையைச் சேர்ந்த மதபோதகரான ஜாகீர் நாயக் மீது பயங்கரவாதிகளுக்கு உதவி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. மலேசியாவில் தஞ்சமடைந்த அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மகாதிர் அரசு மறுப்புத் தெரிவித்தனர். எனவே, மலேசிய பிரதமரிடம் ஜாகீர் நாயக் நன்றி தெரிவித்தார்.

08:10:01 on 10 Jul

மேலும் வாசிக்க தினமலர்

அரசு நாடுகளில் கட்டாய ராணுவ சேவை 12 மாதங்களில் இருந்து 16 மாத காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரான் அச்சுறுத்தலால், ஐக்கிய அரபு நாடு தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது

07:10:01 on 10 Jul

மேலும் வாசிக்க தினமலர்

தாய்லாந்திலுள்ள தாம் லுயாங் குகையில் சிக்குண்டிருந்த 12 சிறார்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

06:28:07 on 10 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பிரெட் கவனாக்கை அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

05:56:01 on 10 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

அர்ஜென்டினாவின் பொருளாதாரம் சிக்கலான நிலையில் உள்ளது.சர்வதேச நாணய நிதியம் அந்நாட்டுக்கு 50 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஐ.எம்.ஃஎப்பில் கடன் வாங்குவது அர்ஜென்டினாவை திவாலாக்கும் செயல் என்று கூறி தலைநகர் பியூனஸ் அயர்ஸில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.

05:11:01 on 10 Jul

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

மேலும் வாசிக்க