View in the JustOut app
X

நாடு திரும்ப நான் முடிவு செய்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் என்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவு என்னை நாடு திரும்புவதில் இருந்து தடுக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்தார். நான் குற்றவாளி இல்லை என உலகமே அறியும். சரியான நேரத்தில் நாடு திரும்புவதற்காக நான் காத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

03:25:02 on 22 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

மெக்சிகோவில் தொடர் கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளன. மெக்சிகோ சிட்டி, குவானஜுவாட்டோ, ஆக்சாகா உள்ளிட்ட நகரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனினும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் எவருக்கும் காயம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவில்லை. பொதுமக்கள் மழை மற்றும் வெள்ளத்தில் மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர்.

03:10:01 on 22 Jun

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு கால்ஷீட் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஷங்கர் தயாரிப்பில் உருவாகும் இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

02:55:02 on 22 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அஜித்துக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்பிற்கு மேலும் 2 நாட்கள் தேவைப்பட்டநிலையில், அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை ரன்வீர் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டதாக ஓட்டல் நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து அவர், தனக்கு ஒரு சின்ன கட்டிலும், மின்விசிறியும் இருந்தால் போதும் என கூறியுள்ளார்.

02:40:01 on 22 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வழங்குவதற்கான சோதனை ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்திய வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.189 அல்லது v2.18.192 பதிப்புகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

02:25:01 on 22 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

அணுஆயுத சோதனை போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கிம் - ஜி ஜின்பிங் ஆகியோர் உறுதி கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கொரிய பிராந்தியத்தில் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு உண்மையான சமாதானம் உருவாகி வருகிறது என்றும் கூறியுள்ளது.

02:10:01 on 22 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி“. இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

01:55:01 on 22 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒருவரின் உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து அளிக்கும் போது, அவருக்கு எப்போது மரணம் நிகழும் என 95% துல்லியமாக கூகுள் கண்டுபிடித்து கூறுகிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கூகுள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒருவரின் உடல்நலன் குறித்த விவரங்களை அளிக்கும் போது மாரடைப்பு எப்போது வரும் சாத்தியங்கள் குறித்து கூற முடியும்.

01:40:01 on 22 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக சமீபத்தில் நாசா தகவல் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வீசி வரும் மாசு கலந்த புழுதி புயலின் காரணமாக செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளில் நிறம் மாறியுள்ளது. மஞ்சள் நிறமாக இருந்து பகுதிகள் சிவப்பு நிறமாக மாறியுள்ளன. இந்த புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

01:25:01 on 22 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

நெல்லை மாவட்டம், கூடங்குளம் 2 வது அணுஉலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து நீராவி வெளியேற்றும் சோதனை நாளை நடைபெறவுள்ளது. பகல் நேரங்களில் நீராவி வெளியேற்றும் வால்வுகள் திறக்கப்படுவதால் அதிக சத்தம் கேக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சம் பட தேவையில்லை என்றும் அணு உலை வளாக இயக்குனர் டி.எஸ்.சவுத்திரி தெரிவித்துள்ளார்.

01:10:01 on 22 Jun

மேலும் வாசிக்க தினமலர்

சமையலின் போது மிளகாய், புளி போன்றவற்றை மிகக்குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். காரணம் மிளகாய், புளி போன்றவை பூண்டின் மருத்துவ ஆற்றலை வெகுவாய் குறைத்து விடும். பூண்டை சமைத்து உண்டால் நல்ல பலன் கிடைக்கும், என்றாலும் பச்சையாக உண்டால் பூண்டினால் ஏற்படும் பலன்கள் மிகச்சிறப்பாக அமையும்.

12:55:01 on 22 Jun

மேலும் வாசிக்க தினகரன்

கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 20,156 மி.யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டதாக கூடங்களம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் செளத்ரி தெரிவித்துள்ளார். முதலாவது, 2வது அணு உலை மூலம் இதுவரை 26,776 மி.யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2வது அணு உலையில் பராமரிப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

12:40:01 on 22 Jun

மேலும் வாசிக்க தினகரன்

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, யூரோக்களை க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். ஸ்கிபோல் விமான நிலையம் வரும் பயணிகள் இனி தங்களது ரொக்கத்தை பிட்காயின் மற்றும் எத்திரியம்களாக மாற்ற முடியும்.

12:25:01 on 22 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

குடும்பங்களைப் பிரித்து வைக்கும் எண்ணமில்லை என்று அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மெக்சிகோ அகதிகளின் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் நடவடிக்கையை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட ஒப்புதல் அளித்துள்ளார்.

12:10:01 on 22 Jun

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

தினமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரு நாள் 8 மணி, ஒரு நாள் 10 மணி, லீவு நாட்களில் 12 மணி என்று செல்லாதீர்கள். தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் கல்லீரலை சுத்தம் செய்கின்றன. செல்களை புதுப்பிக்கின்றன.

11:55:01 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு சி பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் பெரு அணிகள் மோதின. பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

11:40:59 on 21 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக குர்சியாங் என்ற இடத்தில் உள்ள அலிதா தனியார் விடுதியில் தங்கியிருந்தார். ரஜினி தங்கியிருந்தால், அவர் நினைவாக அந்த இல்லத்தின் பெயரை ‘ரஜினிகாந்த் இல்லம்’ என மாற்றியுள்ளார் விடுதியின் உரிமையாளரான மேகுல் பரேக்.

11:40:01 on 21 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதன்படி கருப்பு, வெள்ளை சுண்டல் போன்ற பொருட்களின் சுங்க வரி 60 %, பயறு வகைள் மீதான சுங்கவரி 30 %, போரிக் ஆசிட் மீதான வரி 7.5 %, அர்திமீயா எனப்படும் இறால் மீன் வகைகள் மீதான வரி 15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

11:25:02 on 21 Jun

மேலும் வாசிக்க தினமலர்

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு பயணம் சீட்டு இல்லாமல் பயணம் செய்த 95 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 95 பேரிடம் இருந்து ரூ.14,250 ஐ அபராதமாக ரயில்வே நிர்வாகம் வசூலித்தது.

11:10:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவில் 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 23% அதிகரித்துள்ளது. தற்கொலை செய்து கொள்பவர்களில் அதிகமானவர்கள் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்களைத் தொடர்ந்து 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தேசிய சுகாதாரம் கழகம் தெரிவித்துள்ளது.

10:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க தின மலர்

விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய விமான நிலையங்களை அமைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் விமான நிலையங்கள் அமைக்க போதுமான இடவசதி இல்லாததால், விமானப் போக்குவரத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

10:40:02 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின், மற்றொரு ஆட்டத்தில், பிரான்ஸ்-பெரு அணிகள் மோதின. இப்போட்டியின் 34வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது.

10:34:43 on 21 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்குப் பருவமழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6 மாதத்துக்குப் பிறகு 50 கன அடியை தாண்டியுள்ளது. இந்நிலையில், கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் காவிரியில் வினாடிக்கு 23,000 கன அடி நீர் திருப்பிவிடப்பட்டுள்ளது.

10:26:01 on 21 Jun

மேலும் வாசிக்க நியூஸ் தமிழ் 18

காஷ்மீரில் குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு உள்ளதால், சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என ஒமர் அப்துல்லா கூறியிருந்தார். இது தொடர்பாக பேசிய பா.ஜ., பொது செயலர் ராம், பா.ஜ., தரப்பில் குதிரை பேரத்தில் ஈடுபடும் என்ற கேள்விக்கே இடமில்லை. ஒமர் தனது கட்சி, எம்எல்ஏக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

10:11:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினமலர்

'டிராஃபிக் ராமசாமி' படத்தின் முன்னோட்டம் பார்த்த கமல்ஹாசன் படத்தைப் பாராட்டிக் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், ’மகாத்மா மாதிரியானவரை பாத சாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள். அப்படித் தேடாமல் கிடைத்தவர் தான் டிராஃபிக் ராமசாமி. டிராஃபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே அறிய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

09:56:02 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தின் போது, பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 5 நாட்களில் ரூ. 745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

09:40:01 on 21 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜ கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. காஷ்மீரில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜ குதிரை பேரத்திற்கு முயற்சித்தால் அதனை தடுக்கும் வகைகையில், கவர்னர் மாநில சட்டசபையை கழைக்க வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும்,தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா வலியுறுத்தி வருகிறார்.

09:26:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

தொழில்துறையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் பென்ஜமின் தெரிவித்துள்ளார். மேலும், தொழில்துறையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்த அவர் தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

09:11:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

இன்றைய ஆட்டத்தில், ஆஸி.-டென்மார்க் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் டென்மார்க் அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 38வது நிமிடத்தில் ஆஸி. அணியும் ஒரு கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை அடைந்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

09:01:18 on 21 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கிய மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவிக்கிறது என்று திருச்சியில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனைத்து துறைகளில் இருந்தும் ரூ.5 கோடி வரை மாமூல் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

08:41:13 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடக மாநிலம் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டிகே.சிவக்குமார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கர்நாடக மாநில நீர்வளத்துறை மற்றும் மருத்துவத்துறை மந்திரியாக உள்ளார். இந்நிலையில், மந்திரி சிவக்குமார் ஹவாலா நெட்வொர்க் நடத்துவதாக பெங்களூரு பொருளாதார குற்ற சிறப்பு நீதிமன்றத்தில் வருமானவரித்துறை புகார் அளித்துள்ளது.

08:40:01 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் பேராசையே காரணம், இந்த பேராசைக்கு, காஷ்மீர் மக்கள் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளனர். இதனை வரலாறு ஒருபோதும் பாஜகவின் செயலை மன்னிக்காது என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

08:26:01 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், சிட்கோ பகுதியில், ஆக்சிஸ் வங்கியின், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்தவர்களுக்கு தாங்கள் பதிவு செய்த தொகையை விட ஐந்து மடங்கு அதிகமான பணம் வந்ததால் பலரும் மகிழ்ச்சியடைந்தனர். அங்கு வந்த போலீசார், வாடிக்கையாளர்களை பணம் எடுக்கவிடாமல் தடுத்தனர்.

08:11:01 on 21 Jun

மேலும் வாசிக்க தின மலர்

தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மத்திய அரசால் பறிக்கப்படுவதாக கோவையில் முத்தரசன் பேட்டியளித்துள்ளார். பழனிசாமி முதல்வராக இருந்தாலும், ஆளுநர் மூலம் மத்திய அரசு தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றார். சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

07:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த 2016 தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருப்பூரில் நடந்த வாகன சோதனையில் ரூ.570 கோடி ரொக்க பணத்துடன் கண்டெய்னர் லாரி பிடிபட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த விசாரணை அறிக்கையை தாங்களுக்கு வழங்க வேண்டும் என ஐகோர்ட்டில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

07:41:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினமலர்

சிலை முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தனபால், தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், 2 மாதம் கும்பகோணத்தில் தங்கியிருக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

07:26:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினமலர்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

07:23:43 on 21 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’தூத்துக்குடி போராட்டத்தின்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியது போலத் தெரிகிறது. இது பதட்டத்தில் நடத்திய துப்பாக்கிச்சூடு மாதிரி தெரியவில்லை. அரசுக்கே உரிய ராஜகோபத்தோடு செய்தது போல இருக்கிறது’ என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

07:11:02 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை 5 மடங்கு உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள வீடுகளுக்கு ஒருமுனை மின்சார இணைப்பு பெற ரூ.1,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரூ.9,800 ஆகவும், மும்முனை மின்சார இணைப்பு கட்டணத்தை ரூ.7,475-ல் இருந்து ரூ.35 ஆயிரம் ஆக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

06:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்கினால் விவசாயிகள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று நாமக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.நியாமான முறையில் இழப்பீடுகள் வழங்கப்பட்டால் தாமாக நிலங்களை வழங்குவர் என்றும் குறிப்பிட்டார்.

06:41:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின், இன்றைய ஆட்டத்தில் டென்மார்க்கும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. இதில் முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் உள்ளன.

06:29:15 on 21 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பியவரை காலையில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டியதாக வாஞ்சிநாதன் மீது வழக்கு உள்ளது. வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்தது குறிப்பிடத்தக்கது.

06:26:02 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

‘துப்பாக்கி’, ’கத்தி’ படங்களைப் போலவே இந்தப் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என முன்னரே அறிவித்திருந்த நிலையில், இன்று படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்க் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். சர்கார் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் தாடியுடன் இடம்பெற்றுள்ளார்.

06:14:44 on 21 Jun

மேலும் வாசிக்க விகடன்

பிரதமர் மோடியும் நிதியமைச்சர் அருண் ஜேட்லீயும் நாட்டின் பொருளாதாரத்தையே சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பொருளாதார நிலை குற்றுயிராகக் கிடப்பதாக கூறியுள்ள அவர், அருண்ஜெட்லி அறையில் அடைந்து கிடப்பதாகவும், பிரதமர் மோடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

06:11:01 on 21 Jun

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

பிக் பாஸ் ஓவியாவுக்கு பிறகு எனக்கு தான் ஆர்மி இருக்கிறது என்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதில் வரும் சில வீடியோக்கள் பார்த்திருப்பதாகவும் துரைமுருகன் கூறியுள்ளார். மக்களிடம் திட்டம் குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும். போலீசை வைத்து மிரட்டி நிலம் எடுப்பது முடிமன்னர்கள் காலத்தில் தான் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

05:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சேலம் மாவட்டத்தில் 16 கி.மீ. தூரத்திற்கான நிலம் அளவிடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை இரண்டு அலகுகள் நிலம் அளவிடும் பணி நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் அலகுக்காக வரகம்பாடி, நிலவரப்பட்டி, எருமாபாளையம் கிராமங்களில் அளவிடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

05:40:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

திண்டுக்கல்லில் டாஸ்மாக் வாகனத்துக்கு தீ வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.சுங்கச்சாவடி வழக்கில் சிறையில் இருந்ததால் தீ வைப்பு சம்பவத்தில் தொடர்பில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

05:38:34 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தரும் புள்ளி விவரங்கள் சந்தேகத்தை எழுப்புகிறது. அரிசி உற்பத்தி தொடர்பான முழுமையான உண்மையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:26:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

கோவை புறநகர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்ட் ஊடுருவல் என தகவல் வெளியாகியுள்ளது. அத்திக்கடவு, நரசிபுரத்தில் நக்சல் தடுப்பு பிரிவினர் 4 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மாங்கரையில் ரூ.5,000 கொடுத்து மாவோயிஸ்டுகள் உணவு பொருள் வாங்கியதாக தகவல் வந்துள்ளது.

05:20:42 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து,சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தினர்.உடல் உறுப்புதான விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும்,விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

05:11:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

வழக்கறிஞர்களே நீதித்துறையை விமர்சிப்பது நீதித்துறையை தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமம் என்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் மட்டுமல்ல வழக்கறிஞர்களும் நீதித்துறையை விமர்சிப்பது தற்கொலையை தூண்டுவதற்கு சமம் என்று தெரிவித்தார்.

05:03:09 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கமல் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அதனை நாங்கள் பொருட்படுத்தவில்லை என கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கெரிய அதிபர் கிம்மை வேண்டுமானாலும் கமல் சந்திக்கட்டும் என்றும் அவர் கிண்டலாக கூறியுள்ளார்.

04:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினமலர்

பாகிஸ்தானுக்கு எதிராக பேசும் போதெல்லாம், லாகூர், கராச்சி, ராவல்பிண்டி, முசாபார் நகரிலிருந்து மிரட்டல் அழைப்புகள் வரும். ஆனால், காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்த பின்னர் மிரட்டல் அதிகரித்துள்ளது. இன்று கூட மிரட்டல் விடுத்து அழைப்பு வந்தது என்றும் காஷ்மீர் மாநில பா.ஜ., தலைவர் ரவிந்தர ரெய்னா கூறியுள்ளார்.

04:44:03 on 21 Jun

மேலும் வாசிக்க தினமலர்

முஸ்லிம் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட இந்து பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரி மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அதிகாரிக்கு விளக்கம்கோரி வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

04:43:04 on 21 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஓய்வூதியத்தை மாதம் தோறும் தவறாமல் வழங்குவதற்கு என புதிய நிறுவனம் ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியம் வழங்கப்படும் அவல நிலை மாறும் எனவும், இந்த நிறுவனமானது முழுவதுமாக மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

04:41:02 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

04:31:24 on 21 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லி மருத்துவமனையில் உள்ள வாஜ்பாய் உடல்நலம் பற்றி அவரது மகளிடம் திருநாவுக்கரசர் விசாரித்துள்ளார். வாஜ்பாய் உடல்நிலையில் நலல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகள் தெரிவித்தார் என்று அவர் கூறினார். மேலும் ராகுல், சோனியாவை கமல் சந்தித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கருத்து தெரிவித்தார்.

04:26:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடகாவில் நீர் திறக்க காவிரி மேலாண் ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் தண்ணீர் திறப்பு தொடர்பாக சட்டரீதியான பிரச்சனைகள் வந்தால் அதை சந்திக்க தயார் என்று கூறியுள்ளார். பாசனத்திற்காக கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறக்க அவர் ஆணையிட்டுள்ளார்.

04:20:22 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

நீட் தேர்வு குறைவான மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட சுபஸ்ரீ குடும்பத்திற்கு அதிமுக ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஓபிஎஸ்-யும், இபிஎஸ்-யும் அறிவிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் தற்கொலை முடிவுக்கு செல்ல கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:11:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ‘வேறலெவல்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பரவியது. பின்னர், சிறிது நேரத்தில் ‘அல்லு’ என்றும், ‘ஷார்ப்’ என்றும் பெயர்கள் தலைப்பு வைத்திருப்பதாக போஸ்டர்கள் வெளியானது. இறுதியாக இது டைட்டில் இல்லடா என்றும் ஒரு போஸ்டர் வெளியானது.

03:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

ராணுவ வீரர் ஒருவர் சேகுவேரா உடை அணிந்ததற்காகவும், கம்யூனிசம் வெல்லும் என்று தனது ராணுவத் தொப்பியில் எழுதியதற்காகவும் அவரை அந்நாட்டு ராணுவத்திருந்து நீக்கியுள்ளது அமெரிக்கா.

03:47:56 on 21 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதைத் தடுப்பதற்காக சென்னையிலும், மாவட்டங்களிலும் துடிப்பான இளம் காவல் உதவி ஆணையர்கள், துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதைப்பொருள் விற்பனை ஒழிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

03:41:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 40 லாரிகளில் 800 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். கந்தக அமிலத்தை வெளியேற்ற இன்னும் 5 லாரிகள் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்த அவர், கந்தக அமிலத்தை அகற்றும் பணி இன்னும் 2 நாட்களில் முடிவடையும் என்று உறுதி தெரிவித்தார்.

03:26:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

வரும் 28ஆம் தேதி நேரில் ஆஜராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜூன் 25ஆம் தேதி மருத்துவர் சிவக்குமார், 26ஆம் தேதி மருத்துவர் நளினி, செவிலியர் பிரேமா ஆன்டனி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

03:18:17 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

’எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடங்கும்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் அவர், ’எய்ம்ஸ் மருத்தவமனை அமைக்க பிரதமரை வலியுறுத்தி முதல்வர் வெற்றி பெற்றுள்ளார்’ என்றும், தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புதானம் மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

03:10:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பெய்யான புள்ளி விவரங்களை அளித்து மக்களை அதிமுக அரசு ஏமாற்றுவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி குறித்து தவறான புள்ளி விவரங்களை அளித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2013-14ல் தமிழ்நாட்டில் 53.49 லட்சம் டன் அரிசி உற்பத்தி என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

02:55:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

02:52:41 on 21 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகை நிலானிக்கு 15 நாள் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலானி தாக்கல் செய்த ஜாமின் மனு 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால் நிலானி கைதானார்.

02:40:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இன்று அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டு இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

02:26:02 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

சர்வதேச யோகா தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், அதைச் சிறப்பிக்கும் பொருட்டு இன்றுமுதல் 4 நாட்கள், சைதாப்பேட்டை, வடபழனி, திருமங்கலம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில் யோகா பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளது.

02:10:01 on 21 Jun

மேலும் வாசிக்க தின மலர்

ஈரானியக் கொள்ளையர்கள் 5 பேர் ஆந்திர போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒட்டுமொத்த கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்க தனிப்படை போலீசார் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் நடந்த 100க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகளில் ஈரானியக் கொள்ளையருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

01:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

பசுமையை அழிக்கும் சென்னை-சேலம் இடையே எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். இயற்கையை காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மன்சூர் அலிகான், பியூஸ் மனுஷ், வளர்மதி போன்றவர்களை, சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்’ என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

01:41:01 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறைகள் பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

01:35:20 on 21 Jun

மேலும் வாசிக்க தினமணி

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்ற ஆசிரியரை சூழ்ந்துக் கொண்ட மாணவர்களின் பாசப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆசிரியரின் பணியிட மாற்றத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் நிறுத்தி வைத்ததையறிந்த மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

01:27:32 on 21 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஆசிரியர் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வரும் நிலையில், புகார்கள் தெரிவிக்கப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் அவர், ’ஆசிரியர் கலந்தாய்வில் மனசாட்சியில்லாத சிலர் குளறுபடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.

01:26:02 on 21 Jun

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

பசுமைவழிச் சாலை திட்டத்தின் 45% நீளச்சாலை அதாவது 122 கிமீ தூரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிறது. இதற்காக 860 ஹெக்டர் விவசாய நிலம் மற்றும் 18 ஹெக்டர் வனப்பகுதி நிலம் கைப்பற்றப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலம் 155 ஹெக்டர் மற்றும் விவசாயிகளின் நன்செய் நிலம் 100 ஹெக்டர், புன்செய் நிலம் 605 ஹெக்டேரும் கைப்பற்றப்படுகிறது.

01:18:54 on 21 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கோவையில் இரு கிராம மக்களிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவரை போலீசார் கைது செய்தனர். கோவை மதுக்கரையை சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தடுப்பணை நீர்குறித்து தொண்டாமுத்தூர், பேரூர் மக்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவு செய்துள்ளார்.

01:11:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகரான வாஞ்சிநாதனை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். கைதான வாஞ்சிநாதனிடம் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் மீது போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

12:57:57 on 21 Jun

மேலும் வாசிக்க விகடன்

மத்திய பிரதேச மாநிலம், மொரினா என்ற இடத்தில் அதிகாலையில், ஜீப்பும் டிராக்டர் டிராலியும் மோதிக் கொண்டன. இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

12:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க தின மலர்

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், மீன்பிடி தொழிலுக்காகச் சென்ற மீனவர்கள் ஈரான் நாட்டில் உண்ண உணவின்றி, இருப்பிடமின்றி தவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

12:51:02 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முக்கிய ஆட்டத்தில் குரோஷியாவுடன் இன்று அர்ஜென்டினா மோதவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா தோல்வி அடைந்தாலோ அல்லது டிரா செய்தாலோ அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே அர்ஜென்டினா வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

12:47:37 on 21 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

’யோகா பயிற்சி இந்து மதத்தைச் சார்ந்ததல்ல என உலக நாடுகள் ஏற்று கொண்டுள்ளன’ என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர், ‘மோடியின் ஒவ்வொரு வார்த்தையையும், உலக நாடுகள் கவனிக்கின்றன’ என்றும் கூறியுள்ளார்.

12:41:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அறிவித்துள்ள போராட்டம் தேவையற்றது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் அரசின் திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான் என்றும், அரசின் நன்மைக்காக அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

12:32:07 on 21 Jun

மேலும் வாசிக்க தினமணி

ஓலா மற்றும் உபெர் நிறுவன டேக்ஸி ஓட்டுநர்கள் சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 50 சதவீத ஓட்டுனர்கள் பங்கேற்றுள்ளதால் கால் டாக்சிக்களைப் பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

12:25:02 on 21 Jun

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் பகுதியில் ஆசிரியர் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணியிடமாறுதல் பெற்று செல்லும் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவானை சூழ்ந்து மாணவ, மாணவிகள் கண்ணீர்விட்டு அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ, மாணவியரின் கோரிக்கையை அடுத்து ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைக்கப்பட்டது.

12:19:10 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி காஞ்சிபுரத்தைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும் மஹாயோகம் என்ற அமைப்பு, புதுச்சேரி இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் 36 மணி நேரம் தொடர் யோகாவை நிகழ்த்தி கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

12:11:23 on 21 Jun

மேலும் வாசிக்க விகடன்

டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் நிலவும் சில அவலங்கள் குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசித்தாகக் கூறியுள்ளார். மேலும் அவர், மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியைச் சந்தித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

12:10:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதற்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

11:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

’புதுச்சேரி அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும்’ என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கூறியுள்ளார். மேலும் அவர், ‘சுற்றுலாத்துறை நிதியுதவியுடன் கல்வித்துறை இணைந்து யோகா வகுப்புகள் எடுக்கப்படும்’ என்றும் கூறியுள்ளார்.

11:40:02 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,700 பேர் மீது போடப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து மா.கம்யூ நிர்வாகி பிருந்தா காரத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பங்கேற்றவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

11:33:43 on 21 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளது என நான் தொடர்ந்து பல முறை கூறி வருகிறேன். இயற்கையை அழிக்க பாகஜ எப்போதும் அனுமதிக்காது. முன்னேற்றம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பு வருகிறது. கொண்டு வராவிட்டாலும் எதிர்ப்பு வருகிறது. படித்தும் பயனில்லாத கட்சி காங்கிரஸ்’ என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

11:25:01 on 21 Jun

மேலும் வாசிக்க தின மலர்

மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் முன்னணி குஜராத்தி நாளிதழ் ஒன்றில் பிரதமர் மோடியைத் திருமணமாகாதவர் என்று பேட்டியளித்தது குறித்து பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

11:24:15 on 21 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

"எஸ்வி.சேகர், அன்புச்செல்வன், போன்றவர்களுக்குக் காவல்துறை சேவை, பாதுகாப்பு கொடுப்பது எல்லோரும் அறிந்ததே. பியூஷ், திருமுருகன் காந்தி, வளர்மதி போன்றவர்களைs சிறையிலடைத்து காவலர்கள் நாட்டில் அமைதி காத்து வருவதும் யாவரும் அறிந்ததே. காவல் துறையை கேடயமாகக் கொண்டு இந்த அரசு ஜனநாயக படுகொலைகளை செய்து கொண்டு வருகிறது.”

11:17:55 on 21 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு யோகா குருவான ஜக்கி வாசுதேவ் உடற்பயிற்சி குறித்த சவாலை வெளியிட்டுள்ளார். அவர்கள் உடல் நலத்துடன் வாழவும், தமிழகத்தின் ஆரோக்கியத்தைக் கருதியும் தமது சவாலை ஏற்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

11:11:01 on 21 Jun

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, நாளை மறுநாள் (ஜூன் 23) ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள அவர் காஷ்மீர் செல்ல உள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தபின் அமித் ஷா முதன்முறையாக அங்கு செல்ல உள்ளார்.

10:56:01 on 21 Jun

மேலும் வாசிக்க தின மலர்

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. நீர்வரத்து 6,000 கனஅடியில் இருந்து 3,500 கனஅடியாகக் குறைந்ததை அடுத்து பரிசல்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது.

10:41:01 on 21 Jun

மேலும் வாசிக்க தினகரன்

’முன்னாள் நிதியமைச்சர் மூடிய அறைக்குள் இருந்து கொண்டு பேஸ்புக் மூலம் முக்கிய செய்தியைத் தந்துள்ளார். இந்திய பொருளாதாரத்தின் சாவிகள் பாஜக பொருளாளர் தானே. பாஜக அரசு மூழ்கும் கப்பல் என்பதால் அதில் இருந்து திறமையாளர்கள் விலகிச் செல்கின்றனர்’ என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

10:25:01 on 21 Jun

மேலும் வாசிக்க தின மலர்

சேலம் அன்னதானப்பட்டி கே.எஸ் கார்டன் பகுதியில் உள்ள குடோன்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 2 குடோன்கள் மற்றும் வீடு ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மோகன், சுரேஷ் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10:10:01 on 21 Jun

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அனைவருக்கும் யோகா தின வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், ’நல்ல ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் யோகா பயிற்சி மூலம் பெற முடியும்’ என்று கூறியுள்ளார்.

09:55:02 on 21 Jun

மேலும் வாசிக்க தின மலர்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியைக் கடந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 10,026 கனஅடியில் இருந்து 4586 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 50.32 அடியாகவும், நீர்இருப்பு 18.01 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

09:40:01 on 21 Jun

மேலும் வாசிக்க தின மலர்

மேலும் வாசிக்க